வீட்டிற்கு சென்றதுமே இப்படி ஒரு துக்க செய்தியா.. அப்பா மரணம்.. அனிதாவுக்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்! (வீடியோ, படங்கள்)

அனிதா சம்பத்தின் அப்பா மரணமடைந்த தகவலை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றவர் செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனித்துவத்துடன் விளையாடிய போட்டியாளர்களில் ஒருவரான அனிதா சம்பத் கடந்த வாரம்தான் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
மாரடைப்பால் மரணம்
தான் வெளியேற போவதை அறிந்ததும் புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாட போவதாக கூறி சென்றார். இந்நிலையில் அவரது தந்தையான எழுத்தாளர் சம்பத் மாரடைப்பால் காலமாகியுள்ளார். ஷீரடி சென்றுவிட்டு ஷீரடி சென்றுவிட்டு தனது மகனுடன் ஷீரடி சென்றுவிட்டு ரயிலில் திரும்பியுள்ளார் சம்பத். அப்போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ரயிலில் உயிரிழந்தார். அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படுகிறது.
ரசிகர்கள் இரங்கல்
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அனிதா, இன்னும் தனது அப்பாவை பார்க்கவில்லை. அதற்குள் அவரது அப்பா மரணமடைந்தது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைதளங்களில் சம்பத்தின் மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மரணத்தால் சோகம்
அனிதா அப்பா இறந்த தகவலை கேட்ட இந்த ரசிகர், அனிதா சம்பத்தின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். அவரது அப்பாவின் மரண செய்தியை கேட்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர ஆன்மா சாந்தியடையட்டும் என பதிவிட்டுள்ளார்.
மீண்டும் சோக செய்தி
மற்றொரு ரசிகரான இவர், அனிதா அப்பாவின் ஆத்மா சாந்தியடையட்டும். அனிதாவுக்கு இப்படி ஒரு சோகம் நேரிட்டிருக்கக்கூடாது. பிக்பாஸில் இருந்து எவிக்ட்டான உடனே இப்படி ஒரு சோக செய்தி அவருக்கு வந்திருக்க கூடாது. ரொம்ப வேதனையாக உள்ளது என பதிவிட்டுள்ளார்.
மகளை பார்ப்பதற்குள்
பிக்பாஸ் அனிதா சம்பத்தின் தந்தையும் எழுத்தாளருமான ஆர்.சி.சம்பத் மரணம். தரிசனத்துக்காக சீரடி சென்று திரும்பியவர், ரயிலிலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் பிக்-பாஸில் இருந்து இரு தினங்களுக்கு முன் வெளியேறிய அனிதா, நிகழ்ச்சிக்கு பின் இன்னும் தந்தையை பார்க்கவில்லை என குறிப்பிட்டுள்ளார் இந்த ரசிகர்.
ஆத்மா அமைதி பெறட்டும்
அனிதா அவர்கள் தந்தை காலமானார். ஆத்மா அமைதி பெறட்டும்.. என தனது இரங்கலை பதிவு செய்துள்ளார் இந்த ரசிகர்.
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss