மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் இடங்களில் அன்டிஜென் சோதனை; 71 பேருக்கு தொற்று: அஜித் ரோகண!!

மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்கள் மீது 11 வெளியேறும் இடங்களில் எழுமாற்று அன்டிஜென் சோதனைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோகண இன்று தெரிவித்தார்.
இன்று வரை மொத்தம் 10,987 அன்டிஜென் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இதில் 71 பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியிருப்பதாகவும் இவர்களுக்கு நெருங்கிய தொடர்புள்ளவர்களாக 377 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் தெரிவித்தார்.