;
Athirady Tamil News

வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும், தீவக சிவில் சமூகத்தினருக்கும் சந்திப்பு..

0

வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கும், தீவக சிவில் சமூகத்தினருக்கும் சந்திப்பு..

வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ணவுக்கும், தீவக சிவில் சமூகத்தினருக்கும் (islands civil society) இடையிலான சந்திப்பு இன்றையதினம் காங்கேசன்துறையில் அமைந்துள்ள வடக்கு மாகாண பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்றது.

தீவக சிவில் சமூகம் சார்பில் அதன் தலைவரான தீவக கோட்ட குரு முதல்வர் அருட்தந்தை ம .டேவிட், செயலாளர் மாணிக்கவாசகர் இளம்பிறையன் (யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் ), பொருளாளர் கருணாகரன் குணாளன், உப செயலாளர் சபாரத்தினம் பரமேஸ்வரன்,(சமூக ஆர்வலர்) நிர்வாக குழு உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் (முன்னைநாள் வடமாகாண சபை உறுப்பினர்), கருணாகரன் நாவலன் (பிரதேச சபை உறுப்பினர் வேலணை), வசந்தகுமார் அபராஜ் ( புங்குடுதீவு, நயினாதீவு பொது சுகாதார பரிசோதகர்), பிள்ளைநாயகம் சதீஷ் (சமூக ஆர்வலர்) மற்றும் மண்டைதீவு பிள்ளையார் கோயில் பிரதமகுரு பிரம்மஶ்ரீ இரகுநாதக் குருக்கள்ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

இச்சந்திப்பின் போது தீவகப்பகுதியில் நடைபெறும் சட்டவிரோத மண்கடத்தல், கால்நடைகள் இறைச்சிக்காக வெட்டப்படுதல் மற்றும் போக்குவரத்து பொலிசாரால் பொதுமக்கள் படும் இன்னல்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

அத்துடன் புங்குடுதீவு குறிகாட்டுவான் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச்சாவடியை புங்குடுதீவின் மத்தியில் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது பொருத்தமான இடத்தை தெரிவு செய்து விரைவாக செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதுவரைகாலமும் தீவுப்ப்பகுதியில் நேர்மைமிகு கடமையாற்றி மக்கள் மனம்வென்ற மண்டைதீவு பொலிஸ் பொறுப்பதிகாரி விவேகானந்தன் அவர்களின் பணி இடமாற்றத்தை ரத்துச்செய்து மீண்டும் தீவுப் பகுதியில் கடமையாற்ற ஆவனை செய்து தருமாறும் தீவக சிவில் சமூகத்தினரால் மனு கையளிக்கப்பட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.