;
Athirady Tamil News

புத்தாண்டில் எதை கொண்டுபோகணும்? கொண்டுபோகக் கூடாது? கொளுத்திபோட பிக்பாஸ் கொடுத்த கொலைவெறி டாஸ்க்! (வீடியோ, படங்கள்)

0

பிக்பாஸ் வீட்டில் புத்தாண்டில் ஹவுஸ்மேட்ஸ் தங்களுடன் கொண்டு போகவேண்டிய மற்றும் கொண்டு போகக்கூடாத குணாதிசயங்கள் குறித்து மனம் திறந்து பேசினர். பிக்பாஸ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஹவுஸ்மேட்ஸ்களுக்குள் பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது.

எப்போது யாருக்கும் யாருக்கும் பற்றுமோ என்ற பதைபதைப்பிலேயே ஒவ்வொரு நாளும் கடந்து வருகிறது. இந்நிலையில் புத்தாண்டை முன்னிட்டு பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளுக்கு ஒரு ஸ்பெஷல் டாஸ்க்கை கொடுத்தார்.

மாத்தியோசி டாஸ்க்

அதாவது, 2021ஆம் ஆண்டுக்கு ஹவுஸ்மேட்ஸ் கொண்டு செல்ல வேண்டியது வேண்டாதது என்ன என்பது குறித்து மாத்தியோசி என்ற தலைப்பில் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி கார்டன் ஏரியாவில் உள்ள ஒரு கண்ணாடி பவுலில் ஹவுஸ்மேட்ஸின் பெயர்கள் எழுதப்பட்ட துண்டுச்சீட்டு போடப்பட்டிருந்தது.

ஆஜித்துக்கு ஷிவானி பெயர்

அதை எடுக்கும் ஹவுஸ்மேட்ஸ் அதில் இடம்பெற்றுள்ள சக ஹவுஸ்மேட்ஸின் பெயரை வைத்து அவருடைய நிறை குறைகளை கூற வேண்டும். அதன்படி முதல் நபராக வந்த ஆஜித்துக்கு ஷிவானி பெயர் வந்தது. தொடர்ந்து பேசிய ஆஜித், யார் என்ன சொன்னாலும் நான் அப்படிதான் என்பது உங்களின் பாஸிட்டிவ் அதை புத்தாண்டில் கொண்டு செல்லுங்கள். கன்ஃபெஷன் ரூமில் உடைஞ்சு அழுதது நெகட்டிவ் அந்த குணத்தை இந்த ஆண்டிலேயே விட்டு செல்லுங்கள் என்றார்.

சோம் ஃபேவரிட்டிஸம்

ஷிவானிக்கு சோமின் பெயர் வந்தது. இதைத் தொடர்ந்து பேசிய அவர் எல்லாருடையும் சீக்கிரம் மிங்கிள் ஆவதை அடுத்த ஆண்டுக்கு கொண்டு போங்கள், இதனால் நீங்கள் காட்டும் ஃபேவரிட்டிஸத்தை அடுத்த ஆண்டும் தொடர உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கொண்டு போகாதீங்கள் என்றார்.

சரியா என குழம்புவார்

சோமுக்கு ரியோவின் பெயர் வந்தது. இதைத்தொடர்ந்து பேசிய அவர், எல்லோருக்கும் அன்பை அள்ளி கொடுப்பார். அதை அவர் அடுத்த ஆண்டுக்கு எடுத்து செல்ல வேண்டும். அதேநேரத்தில் ஒரு விஷயம் சொல்லிட்டு அதை சரியா சரியா என்று குழப்பிட்டு இருப்பார் அதை எடுத்து செல்ல வேண்டாம் என்றார்.

முன்கூட்டியே ஜட்ஜ் பண்ணாத

ரியோவுக்கு பாலாஜியின் பெயர் வந்தது. பாலா குறித்து பேசிய ரியோ, முன்கூட்டியே ஜட்ஜ் பண்ணுவதை அடுத்த ஆண்டிலும் எடுத்து செல்ல வேண்டாம் என்றார். மேலும் செல்ஃப் கான்ஃபிடன்ஸை எங்கேயும் விட வேண்டாம் என்றார்.

மழுப்பலா சிரிப்பது

அடுத்து பாலாவுக்கு ரம்யாவின் பெயர் வந்தது. அப்போது பேசிய அவர், கேம்மை கேமாதான் பார்ப்பதை அடுத்த ஆண்டுக்கு எடுத்து செல்ல வேண்டும். அடுத்த ஆண்டிலாவது வெளிப்படையா பேசணும், மழுப்பலா சிரிக்கிறது, கோபப்படும் போது சிரிப்பது போன்றவற்றை அடுத்த ஆண்டுக்கு எடுத்து செல்ல வேண்டாம் என்றார்.

கான்ஃபிடன்ஸ்

லெவல் கம்மி அடுத்து வந்த ரம்யா, கேபி ஸ்ட்ராங்க் கேர்ள் மெண்டலியும் சரி பிஸிக்கலியும் சரி, தனக்கு பிடிச்சவங்களை விட்டுக்கொடுக்க மாட்டாங்க, கூட இருக்குறவங்களுக்கு நல்ல கேரிங் கொடுப்பாங்க அதை எடுத்து செல்ல வேண்டும். ஆனால் கான்ஃபிடன்ஸ் லெவல் கம்மியா இருக்கு அதை அடுத்த ஆண்டில் அதிகரிக்க வேண்டும் என்றார்.

பழிபோடாதீங்க

அடுத்து வந்த கேபிக்கு ஆரியின் பெயர் வந்தது. அதனை பார்த்த கேபி, ஆரி கோபப்பட வேண்டாம் என்றார். மேலும் மற்றவர்கள் மீது பழி போடாதீங்க என்றும் கூறினார். அதேநேரத்தில் உங்களின் நாலேட்ஜ்ஜை மற்றவர்களுக்கு ஷேர் செய்வதை எடுத்துட்டு போகணும் என்று கூறினார்.

டஃபான போட்டியாளர்

இறுதியாக வந்தது ஆரிக்கு ஆஜித்தின் பெயர் வந்தது. அப்போது பேசிய அவர் உங்களின் போராட்ட குணத்தை விடவேக்கூடாது என்றார். 85 நாள் கடுமையான உழைப்பு கொடுத்திருக்கீங்க, அதை அதிகப்படுத்தி அடுத்த ஆண்டுக்கு கொண்டு செல்லணும் என்றார். மேலும் வெட்கத்தை விட்டுவிட்டு நெற்றியில் அடிச்சா மாதிரி தன்னுடைய ஒப்பினியனை சொல்ல வேண்டும். உன்னை டஃபான போட்டியாளராகதான் பார்க்கிறேன் என்றார்.








“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.