;
Athirady Tamil News

அபுதாபி போலீஸ்துறையில் புதிய சீருடை அறிமுகம்..!!

0

அபுதாபி போலீஸ்துறையின் நிதி மற்றும் சேவைகள் பிரிவின் இயக்குனர் கலீபா முகம்மது அல் கைலி கூறியதாவது:-

அபுதாபியில் போலீஸ்துறையில் புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சீருடையில் மொத்தம் 3 பிரிவுகளில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய சீருடையில் நிர்வாக பிரிவில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வீரர்கள் என தனித்தனியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிர்வாக பிரிவில் பணியாற்றுவோர் கோட், சூட், டையுடன் கருநீல நிறத்தில் சீருடை உள்ளது. அதேபோல காவலர்களுக்கு கருநீல நிறத்திலான பேண்ட் மற்றும் வெளிர் நீல நிறத்திலான சட்டையுடன் சீருடை வடிவமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்களில் பாதுகாப்பு பணிப்பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு முழுக்கை டி சர்ட் மற்றும் கருநீல நிறத்திலான பேண்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய சீருடைகள் போலீஸ்துறையில் பணியாற்றும் ஆண், பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

வரும் ஜனவரி 1-ந் தேதி முதல் அபுதாபி முழுவதும் புதிய சீருடையில் போலீசாரை காணலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.