இரணைமடுக்குளத்தின் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.!!

வடமாகாணத்தின் பாரிய குளமான இரணைமடுக்குளம் நீர்வரத்து அதிகரித்தமையால் ஆறு அங்குல படி தலா 4 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இரணைமடுக் குளம் 36 அடிகள் நீர் கொள்வனவு கொண்டபோதும் தற்போது நீர்வரத்து காரணமாக 36 அடி 2.5 அங்குலமாக உயர்ந்தபோது வான் பாய்வதற்கு ஆரம்பித்துள்ளது.
வடமாகாண நீர்ப்பாசன திணைக்களப் பணிப்பாளர் வி.பிரேம்குமார், இரணைமடுக்குளத்தின் நிலைமைகளைப் பார்வையிடுவதற்காக இன்று காலை வருகை தந்த அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது:
வடமாகாணத்தில் 54 குளங்கள் உள்ளபோதும் அதில் 45 சிறிய குளங்களாகவும் 9 பாரிய குளங்களாகவும் அதில் பாரிய குளங்களில் ஒன்றாக இரணைமடுக்குளம் காணப்படுகின்றது.
இதில் இன்று நான்கு கதவுகள் திறந்துவிடப்பட்டுள்ளன. எனவே குளத்திலிருந்து செல்கின்ற நீரைப் பார்வையிடுவதற்கு வருகின்ற மக்கள் அவதானத்துடனும் அதிகாரிகளுக்கு இடையூறு செலுத்தாத வகையிலும் பார்வையிடுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”