வவுனியா பிதேச செயலாளருடன் கலந்துரையாடிய கஜேந்திரன் எம்.பி!!

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் பிரச்சனைகள் தொடர்பில் பிதேச செயலாளருடன் கலந்துரையாடிய கஜேந்திரன் எம்.பி
வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்களின் அடிப்படை பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள், பிரதேச செயலாளர் ந.கமலதாசன் அவர்களுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.
வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று (31.12) காலை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது வவுனியா பிரNதுச செயலக பிரிவுக்குட்பட்ட ஆசிகுளம், பிலவு வீதி மக்களின் விவசாய காணிகளை வன இலாகவினர் கையகப்படுத்துகின்றமை, கற்குளம் -3, கற்குளம்-4 மற்றும் மதுரா நகர் பகுதி மக்களின் காணி உறுதிப் பத்திரம், வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்சரனைகள் தொடர்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் பிரதேச செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததுடன், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.
இதன்போது மக்களது பிரச்சனைகள் மற்றும் காணி உறுதிப் பத்திரம் வழங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்துவதாக பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் சக்திவேல் தனுஸ்காந் அவர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”