;
Athirady Tamil News

மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் – சந்திரசேகர்!! (வீடியோ)

0

தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குரிய விடயம் இன்று கேலிக்குரியதாக மாறியுள்ளதாக, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு ஆயிரம் ரூபா சம்பளம் தொடர்பாக இன்று இடம்பெறவிருந்த கூட்டத்தையும் ரத்துச் செய்துள்ளனர் என இராமலிங்கம் சந்திரசேகர் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராமலிங்கம் சந்திரசேகர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியும், ஆனல்டினுடைய தான்தோன்றித்தனமான செயற்பாடுமே யாழ்.மாநகரசபையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தோல்வியடைவதற்குக் காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen + twenty =

*