;
Athirady Tamil News

வந்து சொல்லுடா.. மீண்டும் முட்டிக் கொண்ட ஆரி, பாலா.. விக்ரம் வேதா இனிமே தான் போல.. தெறிக்குது! (வீடியோ, படங்கள்)

0

ஃப்ரீஸ் டாஸ்க் முடிந்த நிலையில், வொர்ஸ்ட், பெஸ்ட் தேர்வு நடக்கிறது. ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது எந்த விதிமுறையும் கடைபிடிக்காமல் இருந்த பாலாவை வொர்ஸ்ட் பர்ஃபார்மருக்கு ஆரி நாமினேட் செய்ய பாலாவுக்கு கோபம் வந்துவிட்டது.

ஆரியை நாமினேட் செய்ய விடாமல் பாலா பேசிய நிலையில், இங்க வந்து சொல்லுடா என ஆரி டென்ஷன் ஆகிவிட்டார்.

அது பாதிச்சிருக்கும்

பாலா பிக் பாஸ் வீட்டில் தனக்கு எதிராக பேசுவதும், தன்னை எதிர்த்து பேசியதையும் பார்த்து ஆரியின் மனைவி கண் கலங்கி பேசியது ஆரியை நிச்சயம் பாதித்து இருக்கும். இந்த வாரத்திற்கான சுவாரஸ்யம் குறைவான போட்டியாளார் என பாலாவை ஆரி நாமினேட் செய்யும் முதல் புரமோ தற்போது வெளியாகி அனல் தெறிக்கிறது.

ஹேர்ஸ்டைல் மாறிடுச்சு

ஆஜீத் அம்மா மற்றும் ரம்யா சொன்னதை தொடர்ந்து மறுபடியும் தனது ஹேர்ஸ்டைலை மாற்றிக் கொண்ட பாலா மீண்டும் சண்டை கோழியாக மாறிவிட்டார். கண்டிப்பா அடுத்த வாரம் ஆரியை வெளியே அனுப்பி விட வேண்டும் என்கிற ரீதியில் ஆரியுடன் மோத ரெடியாகி விட்டார் பயில்வான் பாலா.

அது பழைய கதை

பாலாஜியை நாமினேட் செய்யும் போது போன வாரம் கேப்டன்சி டாஸ்க்கில் நடந்து கொண்ட விஷயங்களை குறிப்பிட்டு ஆரி நாமினேட், பண்ண அது போன வாரம், இந்த வாரத்தை வைத்து மட்டும் பேசுங்க என்று குறுக்கிட்டார் பாலா. இந்த வாரம் நடந்த ஃப்ரீஸ் டாஸ்க்கை பற்றி பேச வேண்டாம் என்று தான் ஆரி அப்படி பேசுகிறார் என்றும், ஷிவானி அம்மா பேசியதற்கு பாலா எப்படித் தான் வாயைத் திறந்து பேசுகிறாரோ தெரியவில்லை என கமெண்ட்டுகள் குவிகின்றன.

வந்து சொல்லுடா

நாமினேட் செய்யும் போது குறுக்கிட்டு பேசக் கூடாது என அனிதாவுக்கு மட்டும் அட்வைஸ் பண்ண பாலா, ஆரி பேசும் போது, அவரை பேச விடாமல் இத்தனை முறை குறுக்கிட்டதால், கடுப்பான ஆரி, டேய் வந்து சொல்லுடா என கத்திவிட்டார். கத்திய அடுத்த நொடியே தன் தவறை உணர்ந்து அமைதியும் ஆகி விட்டார்.

எகிறிய பாலா

இப்ப நீங்க வந்து ஒரு வார்த்தை சொன்னீங்கள.. அதெல்லாம் இதுவரைக்கும் நான் பொறுத்துக்கிட்டு இருந்தேன். இனிமே அதெல்லாம் பொறுத்துக்க முடியாது என்றார். நீ பொறுத்துக்கவே வேண்டாம்பா என டா வை மாற்றி பா போட்டு ஆரி பேசியதும் இப்ப வந்து சொல்லுடான்னா என பாலா ஆரியிடம் எகிறும் பரபரப்பான புரமோ ரிலீசாகியுள்ளது.

செம சம்பவம்

இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க்கில் ஷிவானி அம்மா வந்து ஷிவானியை திட்டிவிட்டு பாலாவை நோஸ் கட் பண்ணி விட்டு சென்ற தரமான சம்பவத்திற்கு பிறகு, வெள்ளிக்கிழமை எபிசோடில் மீண்டும் ஆரி பாலா மோதல் ஆரம்பித்துள்ளது. விக்ரம் வேதா பிஜிஎம்மை இப்ப போடுங்கடா என ரசிகர்கள் கமெண்ட்டுகளை தெறிக்க விட்டு வருகின்றனர்.









“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 − 5 =

*