;
Athirady Tamil News

என்னடா இன்னைக்கு இப்படி இறங்கிட்டீங்க.. மூன்றாவது புரமோவிலும் ஆரி கூட சண்டை.. இந்த தடவை ரியோ! (வீடியோ, படங்கள்)

0

புத்தாண்டு அதுவுமாக ஹேப்பியான நிகழ்ச்சிகளை பார்க்க நினைத்த மக்களுக்கு இன்றைக்கு வெளியான மூன்று பிக் பாஸ் புரமோக்களில் சண்டை சத்தம் தான் கேட்கிறது. இரண்டு புரமோவில் ஆரிக்கும் பாலாவுக்கும் சண்டை நடந்த நிலையில், மூன்றாவது புரமோவில் ரியோவுக்கும் ஆரிக்குமிடையே பயங்கர சண்டை வெடிக்கிறது.

டைட்டில் வின் பண்ண ரியோவுக்கும் பாலாவுக்கும் தடையாக இருப்பது ஆரி தான் என இருவரும் நினைப்பதே இதற்கு காரணம் என்கின்றனர்.

யார் சரி

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் அனல் பறக்கும் மூன்றாவது புரமோவும் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆண்டின் முதல் நாளே டிஆர்பி அடித்து எகிற விட வேண்டும் என ஹவுஸ்மேட்களிடம் சண்டை டாஸ்க்கை கொடுத்திருக்காங்க போல தெரியுது. ஆரியிடம் அனைவரும் சண்டை போடுவதால் அவர் சரியானவரா? அல்லது அனைவரிடமும் ஆரி சண்டை போடுவதால் அவர் தான் தவறானவரா? என்கிற குழப்ப நிலைக்கு கொண்டு வரும் முயற்சியில் விஜய் டிவி இறங்கி உள்ளது.

பிளான் பன்றாங்க

பிக் பாஸ் நிகழ்ச்சியை விட ஓவியாவுக்கு ஹைப் கூடிய நேரத்தில் அவரை வெளியே அனுப்பியது போல, ஆரியை அடுத்த வாரம் வெளியே அனுப்ப, இந்த வார இறுதியில் இருந்தே பாலாவும் ரியோவும் களமிறங்கி வேலை செய்வது பக்காவாக தெரிகிறது என பிக் பாஸ் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

ஸ்பெஷல் பவர்

இன்னமும் பாலாவுக்கு ஸ்பெஷல் பவர் கொடுக்காத நிலையில், அடுத்த வாரம் அதை வைத்து கூட ஒருவரை வெளியே அனுப்பலாம் என்று சொன்னால், ஆரியை பாலா வெளியே அனுப்ப 100 சதவீதம் வாய்ப்பிருக்கு. ஆனால், அப்படி செய்தால் ரசிகர்களின் நம்பிக்கையை பிக் பாஸ் நிகழ்ச்சி இழந்து விடும் என ஆரியின் ஆர்மியினர் சொல்லி வந்தாலும், சமூக வலைதளங்களில் அந்த நிகழ்ச்சியை பற்றி பரபரப்பாக பேச அதுவும் நிகழ்த்தப்படலாம் என்கிற சந்தேகத்தையும் கிளப்பி வருகின்றனர்.

ரியோவுக்கும் ஆரிக்கும்

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது புரமோவில், நீங்க அக்கறையா சொன்னதை இதுவரைக்கும் நான் கேட்டு இருக்கேன். ஆனால், நான் அக்கறையா சொன்ன ஒரு விஷயத்தை கூட நீங்க கேட்டதே கிடையாது என்கிற வாதத்தை வைத்து எழுந்து நின்று ரியோவும் எகிறும் அட்டகாசமான புரமோ வெளியாகி இருக்கிறது.

அக்செப்ட் பண்ற மனசு இல்லை

ஆரியின் குழந்தையை அப்படி தூக்கி வைத்துக் கொண்டு கொஞ்சிய ரியோ, இப்போ மறுபடியும் கேமாட வந்துவிட்டார் போலத்தான் தெரிகிறது. இன்னும் இரு வாரங்களே எஞ்சி இருக்கும் நிலையில், டைட்டிலை எப்படியாவது தட்டிச் செல்ல வேண்டும் என்பதற்காக மத்தவங்க சொன்னா அக்செப்ட் பண்ற மனசு உங்களுக்கு இல்லை என ரியோ காட்டுக் கத்தல் கத்துகிறார்.

மனைவி சொன்னதை மதிக்கல

இன்னும் இரு வாரங்கள் தான் இருக்கு, உன் கிட்ட ஆரம்பத்தில் இருந்த ஃபன் எங்க போச்சு, ஏன் ஆஃப் ஆகிட்ட, வெளியே இருப்பது போல ஜாலியா இருந்துட்டு வா என ரியோவின் மனைவி ஸ்ருதி எடுத்து சொன்னதை கேட்கும் மனசு முதலில் ரியோவுக்கே இல்லை. ரியோ ஜாலியாக விளையாடினாலே டைட்டில் வெல்ல நிறைய வாய்ப்புகள் உள்ளது.

சோமுக்கு கிடைக்குமா

எப்படியோ ஆரிக்கு பிக் பாஸ் டைட்டில் கொடுக்க மாட்டார்கள் என அவரது ஆர்மியினரே பிக் பாஸ் நிகழ்ச்சியின் போக்கை பார்த்து முடிவு செய்துள்ளனர். அதே போல ரியோ, பாலா, ரம்யா, ஆஜீத், ஷிவானி, எல்லாம் அதற்கு தகுதி இல்லை என்றும் சொல்வதை பார்த்தால், ஒருவேளை சைலன்ட்டா இருந்துட்டு கடைசியில சோம் அல்லது கேபி அந்த டைட்டிலை தட்டிச் செல்வார்களா? என்கிற சந்தேகமும் எழுகிறது, பார்க்கலாம்!

“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × three =

*