;
Athirady Tamil News

கொவிட்-19 : பொரளை தபால் அலுவலகம் மூடப்பட்டது!!

0

பொரளை தபால் அலுவலக பொறுப்பதிகாரி மற்றும் 3 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன இன்று தெரிவித்தார்.

இதன் காரணமாக தபால் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டு விரைவில் கிருமித் தொற்று நீக்கம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை இரவு தபால் ரயில் இயங்காததால் கடிதங்களை வழங்குவதில் தாமதம் ஏற்படும் என்றும் கொழும்பு பகுதிக்கான கடிதங்கள் இரு நாட்கள் தாமதமடையும் என்றும் அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 5 =

*