மாரடைப்பு தவிர்க்க…!! (மருத்துவம்)

தூங்கச் செல்வதற்கு முன் தண்ணீர் குடித்தால் மாரடைப்பு வருவதைத் தவிர்க்கலாம் என்பது உண்மையா?
இதய நோய் சிறப்பு மருத்துவர் செங்கோட்டு வேலு…
மாரடைப்புக்கும் தண்ணீர் குடிப்பதற்கும் தொடர்பே இல்லை. ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் மாரடைப்பு வரும். மாரடைப்பு வருவதைத் தவிர்ப்பதற்கான முன்னெடுப்புகள் நம்மிடத்தில்தான் இருக்கின்றன.
மது, சிகரெட் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். குப்பை உணவுகளைத் தவிர்த்து காய்கறிகள், பழங்களை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். 8-10 மணி நேரம் தூங்க வேண்டியது அவசியம். நமது வாழ்வியலை முறைப்படுத்தி வாழ்ந்தோம் என்றால் மாரடைப்பைத் தவிர்த்து விடலாம்.