;
Athirady Tamil News

விதியை மதிக்க முடியாது எனில்.. ஊருக்கு கிளம்புங்க..இந்திய வீரர்களுக்கு ஆஸியில் பகிர் வார்னிங்..ஷாக் !! (படங்கள்)

0

ஆஸ்திரேலியாவின் விதிகளை மதித்து கிரிக்கெட் விளையாட விருப்பம் இல்லை என்றால், ஆஸ்திரேலியாவிற்கு வர வேண்டாம் என்று ஆஸ்திரேலியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்திய அணியின் மூத்த வீரர்கள் சிலர் கொரோனா விதிகளை மீறியதாக தனிமைப்படுத்தப்பட்டு இருப்பது பெரிய சர்ச்சையாகி உள்ளது. கொரோனா விதிகளை மீறியதாக கூறி ரோஹித் சர்மா, பண்ட், சுப்மான் கில், பிரித்வி ஷா, சைனி ஆகிய ஐந்து இந்திய வீரர்களும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பயோ பபுளை மீறி இவர்கள் ஹோட்டலில் உணவு உட்கொண்டதற்காகவும், அங்கு ரசிகர் ஒருவரை கட்டிபிடித்ததற்காகவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

விசாரணை

இந்த நிலையில் இந்திய வீரர்கள் விளையாடும் நான்காவது டெஸ்ட் போட்டி பிரிஸ்போன் நகரில் நடக்க உள்ளது. அங்கு அதிக கொரோனா கேஸ்கள் இருப்பதால் கூடுதல் கட்டுப்பாட்டு விதிகள் போடப்பட உள்ளது. அங்கு இந்திய வீரர்கள் கூடுதலாக சில நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

மோசம்

இந்த நிலையில் இந்த கூடுதல் கட்டுப்பாட்டு விதிகளை இந்திய வீரர்கள் விரும்பவில்லை. மேலும் சில நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதை இந்திய வீரர்கள் விரும்பவில்லை. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் சிட்னியிலேயே நடத்த வேண்டும் , பிரிஸ்போன் நகரில் நடத்த கூடாது என்று இந்திய அணி நிர்வாகம் கேட்டுள்ளது. ஆனால் என்ன ஆனால் என்ன ஆனால் இந்திய அணியின் கோரிக்கையை ஏற்கும் எண்ணம் ஆஸ்திரேலிய அணி நிர்வாகத்திற்கு இல்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவின் விதிகளை மதித்து கிரிக்கெட் விளையாட விருப்பம் இல்லை என்றால், ஆஸ்திரேலியாவிற்கு வர வேண்டாம் என்று ஆஸ்திரேலியாவின் மூத்த அரசியல் தலைவர்கள் இந்திய அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலிய கட்சி

ஆஸ்திரேலியாவின் எதிர்கட்சிகளை சேர்ந்த முக்கியமான எம்பிக்களான ராஸ் பேட்ஸ், டிம் மாண்டார் ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளனர். அதில், இந்திய வீரர்கள் ஆஸ்திரேலியா வந்தால் ஆஸ்திரேலிய விதிகளை மதிக்க வேண்டும். அதுதான் முறை. விதிகளை மதிக்கவில்லை என்றால் அவர்கள் வர கூடாது.

பொதுவானது

கட்டுப்பாட்டு விதிகள் என்பது எல்லோருக்கும் பொதுவானது. அவர்களுக்கு இங்கே இருக்க விருப்பம் இல்லை என்றால் கிளப்பி செல்லலாம். இது மிகவும் சாதாரண விஷயம். அவர்கள் கட்டாயமாக விதிகளை பின்பற்ற வேண்டும் என்று இரண்டு பேரும் குறிப்பிட்டுள்ளனர்.

கோபம்

ஆஸ்திரேலிய எம்பிக்கள் இப்படி பேசுவது இந்திய அணியை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்திய அணி நிர்வாகமும் இதனால் கோபத்தில் உள்ளது. இதனால் நான்காவது டெஸ்ட் போட்டி நடக்குமா என்பதே சந்தேகம் ஆகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen + 2 =

*