;
Athirady Tamil News

அவ்ளோ ஸ்ட்ரெஸ்.. கார்டன் ஏரியாவில் கர்ஜித்த ஆரி.. இந்த கோபத்தை பாலாவிடம் காட்டியிருந்தா? (வீடியோ, படங்கள்)

0

அத்தனை வலிகளையும் அடக்கி வைத்திருந்த ஆரி, கமல் பேசியதும் சற்றே ரிலீவ் ஆகி கார்டன் ஏரியாவில் கர்ஜித்து தனது ஸ்ட்ரெஸ்ஸை போக்கிக் கொண்டார்.

இந்த ஆண்டின் ஆரம்பமே விஜய் டிவிக்கு ஜாக்பாட் தான். வெள்ளி மற்றும் சனிக்கிழமை எபிசோடு டிஆர்பி உச்சத்துக்கு எகிறி இருக்கும். ஊருக்கு எத்தனை பிரச்சனை நடந்தாலும், அதையெல்லாம் தாண்டி பிக் பாஸ் வீட்டு பிரச்சனையை பேச வைத்தது தான் இந்த ஷோவின் வெற்றிக்கு காரணம்.

ரொம்பவே ஹேப்பி

இந்த வாரம் கேப்டனாக மாறிய நிலையில், ஆரி ரொம்பவே ஹேப்பியாக இருந்தார். ஷிவானி அம்மா இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க்கில் வந்து பாராட்டியதில் இருந்து இன்னமும் சந்தோஷப்பட்டார். தொடர்ந்து எங்கடா என் தலைவன் ஆரி என ரம்யாவின் தம்பி, பகவான் ஆரி என சோம் தம்பி எல்லாம் பேசியதும், ஆஜீத்துக்கு கொஞ்சமாச்சும் புத்தி மதி சொல்லி இருக்கலாம் என பேசும் போதும், எங்கம்மா என்ன தான் ஆஃப் பண்ணிட்டாங்களே என கேஷுவலாக ஆரி இருந்தார்.

டார்கெட் பண்ணிட்டாங்க

வந்த எல்லா குடும்பத்தாரும் ஆரியை ஒரு மனதாக பாராட்டினாங்க என ரியோ, ரம்யா மற்றும் பாலா பேசிய இடத்தில் இருந்து தான் வெள்ளிக் கிழமை சண்டையே ஆரம்பித்தது. மேலும், நியூ இயர் வாரம் ஜெயில் கிடையாது என பிக் பாஸ் சொல்லி இருந்தால், பிரச்சனையே வெடித்து இருக்காது. டிஆர்பிக்காக வொர்ஸ்ட் பர்ஃபார்மர் தேர்வு பண்ணுங்க என்கிற இடத்தில் ஆரியையும் பாலாவையும் வச்சி செஞ்சிட்டாங்க.

பாட்ஷா மாதிரி

பச்சை ரத்தம் ஒழுகும் போதும் பச்சை புள்ள சிரிப்ப பாருடா.. என பாட்ஷா படத்தில் ரஜினிகாந்தை கட்டி வைத்து அடிக்கும் போதும் அமைதியாக இருப்பது போலவே பாலா கீழ்த்தரமான வார்த்தைகளை பயன்படுத்தி திட்டும் போதும், திருப்பி திட்டாமல் தான் சொன்ன சோம்பேறித்தனம் என்கிற வார்த்தைக்கும் மன்னிப்பு கேட்ட ஆரியின் மனதை பார்த்துத் தான் இத்தனை ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர். எல்லாரும் ஆரியின் பி.அர். டீம் கிடையாது.

ஆரி மனைவிக்கு எப்படி இருக்கும்

பிக் பாஸ் வீட்டில் வேலை செய்யாமல் சோம்பேறியாக இருக்காதீங்கன்னு சொன்னதற்கு சோம்பேறின்னு சொல்லாதீங்கன்னு அப்படி கத்தும் பாலாஜி முருகதாஸ், ஆரியை பார்த்து பேக்கு, அடி முட்டாள், வெளியே வந்தா பார்த்துக்குறேன், அடிச்சிடுவேன் ரேஞ்சுக்கு பேசியதை பார்த்தால் ஆரியின் மனைவிக்கு எவ்வளவு மன அழுத்தம் வரும். ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிலேயே அதை சொல்லி அழுதாங்க, கொஞ்சமாவது வெளியே இருக்கும் குடும்பத்தை நினைத்து சண்டை போடாமல் வாதம் பண்ணி ஜெயிக்க பாருங்க என நெட்டிசன்கள் அட்வைஸ் பொழிந்து வருகின்றனர்.

ரியா ஷோவை பார்க்க முடியுமா?

12 வயதானவர்களுக்கு மேல் தான் என இந்த ஷோவில் போடப்பட்டிருந்தாலும், 3 வயதான ஆரியின் குழந்தை முதலே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து வருகிறது. இப்படி மனநோயை கொடுக்கும் விதமாக சண்டை போடுவதை ஒளிபரப்பினால், அந்த குழந்தை எப்படி ஷோவை பார்க்க முடியும் ஏ சர்டிபிகேட் ஷோவுக்கு கொடுங்க என்கிற வாதங்களும் வழுத்து வருகின்றன. கர்ஜித்த ஆரி ஒவ்வொரு முறையும் ஹவுஸ்மேட்கள் தன்னை ஒதுக்கி வைத்த வலி, தனது குழந்தையையும் மனைவியையும் பார்த்த சந்தோஷத்தை அடுத்த நொடியே மறக்கடிக்க வைத்த நயவஞ்சகம் அத்தனை குற்றச்சாட்டுகள் எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு எதிர்வினை ஆற்றாமல் இருந்து கடைசியில் கார்டன் ஏரியாவில் கர்ஜித்த ஆரியை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 − 14 =

*