ஒன்னுமே புரியல.. அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்.. ரஹானே எடுத்த முடிவு.. இந்தியாவிற்கு சறுக்கல்!! (படங்கள்)
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவிற்கு ஓவர் கொடுக்காமல் ரஹானே தாமதம் செய்ததும், சைனிக்கு மிகவும் தாமதமாக ஓவர் கொடுத்ததும் சர்ச்சை ஆகியுள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. மழைக்கு இடையே இன்று முதல்நாள் ஆட்டம் நடைபெற்றது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டிற்கு 166 ரன்கள் எடுத்துள்ளது. மார்னஸ், புக்கோவஸ்கி இருவரும் இதில் அரைசதம் அடித்துள்ளனர். மழை காரணமாக நாளை 30 நிமிடம் முன்பாக ஆட்டம் தொடங்க உள்ளது.
எப்படி
இந்த போட்டியில் ரஹானேவின் கேப்டன்சி நன்றாக இருந்தாலும் அவர் எடுத்த இரண்டு முக்கியமான முடிவுகள் பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. முதல் விஷயம் முதல் 30 ஓவரில் சைனியை ஓவர் போட ரஹானே அனுமதிக்கவில்லை. பந்து தேய்ந்த பின் 31வது ஓவரில்தான் சைனி ஓவர் போட்டார்.
மோசம்
சைனி ஓவர் போட தொடங்கி சில ஓவர்களில் புக்கோவஸ்கி விக்கெட்டை எடுத்தார். சைனி போட்ட லென்த் காரணமாக புக்கோவஸ்கி அவுட் ஆனார். சைனிக்கு முன்பே ஓவர் கொடுத்து இருந்தால் புக்கோவஸ்கி விக்கெட் முன்பே விழுந்து இருக்கும், அவரும் அரை சதம் அடித்து இருக்க மாட்டார்.
ஆனால்
ஆனால் சைனியை மிகவும் தாமதமாகவே ரஹானே பயன்படுத்தினார். அதோடு ஜடேஜாவை கடைசி 10 ஓவர்கள் இருக்கும் போதுதான் ரஹானே அழைத்தார். அதுவரை ஜடேஜா ஓவர் போடவில்லை. இரண்டு பவுலர்களை ரஹானே மிகவும் தாமதமாக பயன்படுத்தியது பலருக்கும் அதிர்ச்சி அளித்தது.
ஏன் பாஸ் ?
இந்திய அணியில் மூத்த பவுலர்கள் இப்போது இல்லை. இருக்கிற பவுலர்களை வைத்துதான் இந்திய அணி ஆடி வருகிறது. அப்படி இருக்கும் போது இருக்கிற நல்ல பவுலர்களையும் ரஹானே மிகவும் தாமதமாக பயன்படுத்துவது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. ரஹானேவின் இந்த முடிவு பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.