;
Athirady Tamil News

ஸ்பெயினில் 20 லட்சத்தைக் கடந்தது கொரோனா பாதிப்பு..!!!

0

சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 210 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் ஸ்பெயின் 9-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், ஸ்பெயினில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டியுள்ளது. அங்கு கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 51675 ஆக உள்ளது என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 1 =

*