அதை செய்யலயே.. கோபத்தில் இருக்கிறாரா ஷிவானி அம்மா? பேச்சை கேட்காமல் இருப்பது தான் காரணமா? (வீடியோ, படங்கள்)

ஷிவானியின் அம்மா நிஜமாவே மகள் மீது பயங்கர கோபத்தில் இருக்கிறார் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. சீரியல் நடிகையாக இருந்த ஷிவானி நாராயணன், இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளராக 90 நாட்களை கடந்துள்ளார்.
ஷிவானி நாராயணன் அதற்கு தகுதியான ஆள் இல்லை என்கிற விமர்சனங்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.
பாலா கூட சேர்ந்து ஷிவானி நாராயணன் இந்த சீசனில் தனியா கேம் ஆடாமல் பாலா கூட சேர்ந்து சும்மா ஜாலியாக சுற்றிக் கொண்டு பிக் பாஸ் வீட்டில் 90 நாட்களை கடந்துள்ளார் என்கிற குற்றச்சாட்டு அவர் முன்பு வைக்கப்பட்டு வருகிறது. 70 நாட்களில் என்ன செஞ்சீங்க என்று பிக் பாஸ் கேட்ட போதே, பதில் இல்லாமல் முழித்த ஷிவானி, அதன் பின்னர் அர்ச்சனாவிடமும் அழுது புலம்பினார்.
24 லட்சம் பேர்
சின்னத்திரை நடிகையான ஷிவானி நாராயணன் கடந்த ஆண்டு போடப்பட்ட லாக்டவுனில் தினமும் வீட்டில் இருந்தபடியே இன்ஸ்டாகிராமில் படு கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 24 லட்சம் ரசிகர்களை சேர்த்திருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானி இத்தனை நாட்கள் இருக்க அவர்களது ஓட்டுக்கள் முக்கிய காரணம்.
மகளுக்காக அம்மா
பிக் பாஸ் வீட்டில் எப்போதெல்லாம் ஷிவானி நாமினேட் செய்யப்படுகிறாரோ அப்போதெல்லாம் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் ஷிவானியின் அம்மா போட ஆரம்பித்து, தனது மகளுக்காக புரமோஷன் செய்து வந்தார். அந்த வாரம் ஷிவானியின் புது போட்டோவை பார்த்த ரசிகர்கள் ஓட்டுக்களை வாரி இரைத்து அவரை காப்பாற்றி விடுவார்கள்.
ஆயா வேலை
ஆனால், ஷிவானி அம்மா ஃப்ரீஸ் டாஸ்க்கின் போது 10 நாட்கள் குவாரண்டைனில் இருந்து தனது செல்ல மகளை பார்க்க பிக் பாஸ் வீட்டுக்கு வந்த நிலையில், தனது மகளை கொஞ்சாமல், பாலாவுக்கு ஆயா வேலை செய்யவா இங்க வந்த என வச்சு விளாசி விட்டார். ஷிவானி உடனே அழுது தீர்த்து விட்டார்.
கடுங்கோபத்தில்
ஷிவானியின் செயலால் அவங்க அம்மா அகிலா ரொம்பவே அப்செட் ஆகியுள்ளார் என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை நிரூபிக்கும் விதமாக அக்டோபர் இறுதிக்கு மேல், ஷிவானியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புதிய போஸ்ட் கூட இல்லை. மகளுக்கு ஓட்டுப் போடுங்க என கேட்பது போல எந்த ஒரு புரமோஷனையும் ஷிவானி அம்மா செய்யவில்லை.
கச்சேரி இருக்கு
ஷிவானி நாராயணன் வீட்டுக்கு வந்தா போதும் என இருக்கிறார் ஷிவானி அம்மா. நிச்சயம் ஷிவானி வீட்டுக்கு வரும் போது அவரது அம்மாவிடம் இருந்து ஸ்பெஷல் கச்சேரி இருக்கும் என்றும் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இன்னமும் அம்மா அவ்வளவு சொல்லியும் பாலா உடனே சுற்றிக் கொண்டிருப்பதால் ஷிவானி அம்மாவின் கோபம் மேலும் அதிகரித்துள்ளது என்கின்றனர்.
ஷிவானி வெளியேறுவார்
ஆஜீத்தை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் இருக்க தகுதி இல்லாத நபர்களில் முதலிடத்தில் ஷிவானி நாராயணன் தான் உள்ளார் என ஏகப்பட்ட ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த வாரம் ரம்யா பாண்டியன் அல்லது ஷிவானி ஆகிய இருவரும் தான் குறைவான ஓட்டுக்களை பெற்று வருவதாகவும், ஷிவானி தான் வெளியேற்றப்படுவார் என்றும் கணித்து வருகின்றனர். விஜய் டிவி என்ன பிளான் வச்சிருக்காங்கன்னு வெயிட் பண்ணி பார்ப்போம்.
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss