;
Athirady Tamil News

ஆரி ஒரு தடவ தான் சொன்னாரு.. அதையே பாலா நூறு தடவை சொல்லிட்டாரு.. ’ஆம்பள பையன்’ மேட்டரு! (வீடியோ, படங்கள்)

0

ஆரி என்ன ஆம்பள பையனான்னு கேட்டுட்டாரு என கேமராவுக்கு முன் நின்று பாலா பேசியதை பார்த்து நெட்டிசன்கள் சிரித்தும் கலாய்த்தும் வருகின்றனர். ஆரியே ஒரு தடவை தான் சொன்னாரு, பாலா ஏன் நூறு தடவை சொல்றாரு என மீம்கள் தெறிக்கின்றன.

ஆரியை எப்படியாவது பழி வாங்க வேண்டும் என்பதை மட்டுமே பாலா நினைத்து கேம் ஆடுவது பச்சையாக தெரிகிறது என்றும் விளாசி வருகின்றனர்.

ஆம்பள படம் ஓடுது

பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்க நினைத்த ரசிகர்களுக்கு டிவியில் திடீரென ஆம்பள படம் ஓடுவது போன்ற எஃபெக்ட்டை பாலா கொடுத்து விட்டார். ஆம்பள பையன் தானே ஓடி வந்து புடி என ஆரி சொன்னதை அப்படியே திரித்து ஆம்பள பையன்னு என்னை கிண்டல் செய்து கோபப்படுத்த ஆரி பார்க்கிறார் என கேமரா முன்பு பாலா பதிவு செய்தார்.

நூறு தடவை

டுபாக்கூர், சனம் ஷெட்டி ஆம்பளையா இருந்திருந்தா அடிச்சிருப்பேன், பப்பட், பேக்கு, அடி முட்டாள், அவன் இவன்னு பாலாஜி ஏகப்பட்ட வார்த்தைகளை இந்த பிக் பாஸ் சீசனில் விட்டுள்ளார். அதையெல்லாம் மறைத்து விட்டு, ஆரி பேசிய சோம்பேறி, ஆம்பளை பையன் தானே வந்து விளையாடு வார்த்தைகளை பல தடவை பேசி வீண் சண்டையை இழுக்க முயற்சிக்கிறார் என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆரி தான் டார்கெட்

அதிக புள்ளிகளை கொண்டிருப்பவர்களை அவுட்டாக்கிவிட்டு தன் பக்கம் வா பாலா, என்று ஆரி சொல்லி அமர்ந்திருக்க, ஆரியை மட்டுமே டார்கெட் பண்ணி வாங்க விளையாடலாம் என பாலா ஆரம்பித்ததே சூழ்ச்சி தான் என்றும், ஷிவானியை காப்பாற்றவே அந்த மர ஸ்டூல்களை போட்டுவிட்டு, ஆரி ஓடக் கூடாது என பேசியது தான் ஆரிக்கு கோபத்தை தூண்டியது என்றும் கூறுகின்றனர்.

ஆரி பேசியது தப்பு

ஆரி அர்ஜுனன் கண்டிப்பாக அந்த வார்த்தை பிரயோகத்தை தவிர்த்திருக்க வேண்டும் என்றும், பெண்கள் என்றால் ஓடி விளையாட மாட்டாங்களா என ஏகப்பட்ட பெண்கள் சமூக வலைதளங்களில் ஆரியை அட்டாக் செய்து வருகின்றனர். ஆனால், அவர் அந்த வீட்டில் சுவற்றோடு சுவற்றில் பல்லி போல ஒட்டியிருக்கும் மூவரை மட்டும் தான் குறிப்பிட்டு பேசியுள்ளார் என்பது ஷோவை பார்த்தால் புரியும் என ரசிகர்கள் சப்போர்ட் செய்து வருகின்றனர்.

ஷிவானிக்குத் தான் டிக்கெட்

இங்கே கொடுக்கும் குழந்தைத் தனமான டாஸ்க்குகள் எல்லாம் ஷிவானிக்கு என்றே செட் செய்தது போலவே தெரிகிறது. எப்படியோ இந்த வாரம் ஷிவானிக்கு குறைவான ஓட்டுக்கள் வந்தால், அவருக்கு டிக்கெட் டு ஃபினாலே கிடைத்து விடும். ஷிவானிக்கு அடுத்து குறைவான ஓட்டுக்கள் பெறும் நபர் இந்த வாரம் எவிக்ட் செய்யப்படுவார் என்றே கணிக்கப்படுகிறது.

யார் வெளியேறுவார்

மக்களின் ஓட்டுக்கள் அடிப்படையில் பார்த்தால், முதலிடத்தில் ஆரி, இரண்டாம் இடத்தில் ரியோ ராஜ், மூன்றாம் இடத்தில் பாலாஜி முருகதாஸ், நான்காம் இடத்தில் சோமசேகர், ஐந்தாம் இடத்தில் கேபி, ஆறாம் இடத்தில் ரம்யா மற்றும் ஏழாம் இடத்தில் ஷிவானி உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷிவானிக்கு டிக்கெட் கிடைத்தால், ரம்யா அல்லது கேபி வெளியேற வாய்ப்புகள் அதிகம்.“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − 3 =

*