;
Athirady Tamil News

யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றப்படுகிறது!

0

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக வளாகத்தினுள் அமைக்கப்பட்டிருக்கும் முள்ளிவாய்க்கால் மனிதப்பேரவல நினைவுத்தூபி கனரக வாகனம் மூலம் இடித்து அகற்றப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற மனிதப் பேரவலத்தின்நினைவாக, பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம்நிறுவப்பட்ட நினைவுத் தூபியே அந்த இடத்தில் இருந்து அகற்றப்படுவதாக அங்கிருந்துஅங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் – அரசாங்கத்துக்குச் சொந்தமான நிலத்தில், அனுமதி இன்றி முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அமைக்க முடியாது என்று பல்கலைக்கழக மானியங்கள்ஆணைக்குழு தடை விதித்திருந்தது. அதனால் அதன் கட்டுமானப் பணிகளை நிறுத்துமாறுஅப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் இ. விக்னேஸ்வரன் தடை விதித்திருந்தார். எனினும்தடைகளைத் தாண்டி மாணவர்கள் நினைவுத் தூபியை நிறுவியிருந்தனர்.

அதன் பின், அந்தத் தூபியை அப்புறப்படுத்துமாறு பல உயர்மட்ட அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுவந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*