;
Athirady Tamil News

பாலாஜி மேல மட்டும் தப்பு இல்லடா.. ஆரியை மறைமுகமாக தாக்கிய சோம்.. ஒத்து ஊதிய ரியோ! (வீடியோ, படங்கள்)

0

பாலாஜியின் கோபத்திற்கு வேறு சிலரும் அதிக காரணம் மறைமுகமாக ஆரியை தாக்கி பேசினார் சோம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள ஆரிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.

பிக்பாஸ் வீட்டில் மற்ற ஹவுஸ்மேட்ஸ் ஒருவரை பற்றி ஒருவர் புறணி பேசும் போது, ஆரி மட்டும் எப்போதும் சக போட்டியரிளர்கள் விளையாடும் கேமை பற்றி மட்டுமே பேசி வருகிறார்.

ஆரியை டார்கெட் செய்து மேலும் மற்ற போட்டியாளர்களின் குறைகளை சுட்டிக்காட்டி, அவர்களின் குறைகளை திருத்திக்கொள்ள முயற்சி செய்கிறார். ஆனால் இந்த விஷயம் சக ஹவுஸ்மேட்டுகளுக்கு பிடிக்கவில்லை. இதனால் மொத்தமாய் சேர்ந்து ஆரியை டார்கெட் செய்து வருகின்றனர்.

ஃபிரீஸ் டாஸ்க்கின் போது

இதனால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனை ஃபிரீஸ் டாஸ்க்கின் போது உணர்ந்து கொண்ட ஹவுஸ்மேட்ஸ் தொடர்ந்து ஆரியை டார்கெட் செய்து வருகின்றனர். வெளியே தப்பா தெரிஞ்சுருப்பான் வெளியே தப்பா தெரிஞ்சுருப்பான் இந்நிலையில் இன்றைய எபிசோடில் ரியோவும் சோமும் கார்டன் ஏரியாவில் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பேசும் ரியோ வெளியே தப்பா தெரிஞ்சுருப்பான். கடந்த வாரம் கமலின் எபிசோடின் போது தேவையில்லாமல் திட்டுவாங்கி வெளியே தவறா தெரிஞ்சுருப்பான் என்று கூறுகிறார்.

பழைய பாலாவ காணோம்

அதற்கு பதில் சொல்லும் சோம், பாலா மாறிட்டுருந்தான். வீட்லேருந்து வந்துட்டு போன பிறகு பழைய பாலாவ காணோம்னு சொல்லி சொல்லி அவன் ஒரு மாதிரி ஆயிட்டான். எப்போதும் சண்டை போட்டுக்கிட்டே இருக்கணுமாம்.. பாவம் அவன்.. இப்போ அவன் இந்த மாதிரி ஆடுறதுக்கு காரணமும் அவன சேவ் பண்ணிக்கிறதுக்குதான். அவனுக்கு பயம் வந்துடுச்சு என்றார்.

எஸ்கேப்பாக வேண்டும்

அதற்கு பதில் சொன்ன ரியோ அவன் ஆரம்பத்துல செஞ்சதுக்கெல்லாம் இப்போ திரும்புது என்று கூறினார். அதற்கு பதில் கூறிய சோம், நாமினேஷன்லேருந்து எஸ்கேப்பாக வேண்டும் என்றுதான் இப்படி விளையாடுகிறான் என்றார்.

சரியாக விளையாடவில்லை

மேலும் பாலாஜி சண்டை போட்டதையெல்லாம் தவிர்த்து பார்த்தா அவன் நல்லாதான் விளையாடியிருக்கான் என்றும் கூறினார். இதனைக் கேட்ட ரியோ, ஒரு பாயிண்ட்டுக்கு பிறகுதான் பாலாஜி கரெக்ட்டா விளையாடியது போல் உள்ளது. அதற்கு பதில் கூறிய சோம், பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க் வரைக்குமே பாலாஜி சரியாக விளையாடவில்லை என்றார்.

எல்லார் மேலேயும் தப்பு

இருக்கு அதனைக் கேட்ட சோம் யாராவது பாலாஜிக்கு சொல்லி கொடுத்திருக்க வேண்டும் என்று கூறினார். அதற்கான ஸ்பேஸை யாருக்கும் கொடுக்கவில்லை பாலாஜி என்றார் ரியோ. தொடர்ந்து பேசிய சோம், பாலாஜி இப்படி இருக்க எல்லார் மேலேயும் தப்பு இருக்கு.. அவன் மேலேயே எல்லாத்தையும் சொல்ல முடியாது.

ஆரியை குறிவைத்த சோம்

சில பேர் மேல ரொம்ப தப்பு இருக்கு.. அதை யார் என்று சொல்ல நான் விரும்பவில்லை என்றார். சோம் பேசியதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் ஆரியை தான் மறைமுகமாக சோம் சொல்கிறார் என்று கூறி வருகின்றனர். ஃபிரீஸ் டாஸ்க்கின் போது ஹவுஸ்மேட்ஸின் குடும்பத்தினர் வந்து சென்றதில் இருந்து சோம் ஆரியை டார்கெட் செய்து வருவதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.






“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 20 =

*