;
Athirady Tamil News

பயணம் பாதுகாப்பானதா? (மருத்துவம்)

0

எனக்கு போன மாதம் ஹார்ட் அட்டாக் வந்து சரியாகி இப்போது ஓய்வில் இருக்கிறேன். வியாபாரம் சம்பந்தமாக துபாய் செல்ல வேண்டியிருக்கிறது? நான் விமானப் பயணம் செய்யலாமா டாக்டர்?

இதயநோய் மருத்துவர் ஹரீஷ் சோமசுந்தரம்…

ஹார்ட் அட்டாக் வந்து அதில் இருந்து மீண்டு உள்ளீர்கள். ஒரு மாதம் கழித்த நிலையில் கண்டிப்பாக விமானப் பயணம் செய்யலாம். பயணம் கிளம்பும் 2 நாட்களுக்கு முன்பு உங்களின் இதயநோய் மருத்துவரை சந்தித்து எக்கோகார்டியோகிராம், இசிஜி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பரிசோதனைகளை செய்து பார்த்துவிட்டு, உடல் நல்ல நிலையில் உள்ளது என்றவுடன் கிளம்பலாம். விமானப் பயணத்தின் போது இருக்கையில் வெகுநேரம் அமராமல் அடிக்கடி எழுந்து நடக்க வேண்டும்.

கால்களை அசைக்கும் பயிற்சிகளை செய்ய வேண்டும். வெகுநேரம் அமர்ந்து இருக்கும் போது இதய நோயாளிகளுக்கு கால்களில் ரத்தக்கட்டிகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனால் நடப்பது முக்கியம். மருத்துவரின் அறிவுரைப்படி வீனஸ் ஸ்டாக்கிங்ஸ் காலுறைகளை கால்களுக்கு அணிந்து கொண்டால் ரத்தக்கட்டிகள் உருவாகாது. பயணச்சீட்டு எடுக்கும் போதே Low salt diet என வேண்டுகோள் கொடுத்துவிட்டால் உப்பு குறைவான உணவுகளை மட்டுமே கொடுப்பார்கள். மேலும் பழங்கள், அவித்த காய்கறிகள் சாப்பிடலாம். மது மற்றும் மாமிச உணவுகளை விமானப் பயணத்தின் போது அறவே தவிர்த்துவிட வேண்டும்…’’

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*