;
Athirady Tamil News

மாணவர்களிற்கு இருக்கும் உணர்வு எனக்குமுண்டு; தூபியை மீள அமைக்க தயார்: “புளொட்” தலைவரிடம் தெரிவித்த துணை வேந்தர் (வீடியோ & படங்கள்)

0

மாணவர்களிற்கு இருக்கும் உணர்வு எனக்குமுண்டு; தூபியை மீள அமைக்க தயார்: “புளொட்” தலைவரிடம் தெரிவித்த துணை வேந்தர்

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டது எனக்கும் கவலைதான். அது மேலிடத்தின் உத்தரவிலேய இடிக்கப்பட்டது. அதற்காக ஆதாரமுள்ளது. இடிக்கப்பட்ட தூபியை மீள கட்டுவேன் எனவும் அதுக்குரிய அனுமதி பெறுவது முதல் முழுமையான ஆதரவை அனைத்துத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் தர வேண்டுமென யாழ்ப்பாண பல்கலைகழக துணைவேந்தர் என்னிடம் தெரிவித்தார் என நாடாளுமன்ற உறுப்பினரம், புளொட் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

உடைக்கப்பட்ட தூபியை மீள கட்ட வேண்டுமென வலியுறுத்தி பல்கலைகழக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்ட களத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் ஆகியோர் போராட்டக்களத்திற்கு சென்றனர். பின்னர், பல்கலைகழக துணைவேந்தரை சந்தித்து பேசினர். இது தொடர்பில் அவர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

“எனக்கு அதிக அரசியல் அழுத்தம் இருந்ததாக அவர் கூறுகிறார். அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் உள்ளதாக கூறினார். இந்த நினைவுத்தூபியை இடிக்க எனக்கு அழுத்தம் தந்தார்கள். இப்பொழுது பலர் தமக்கு தொடர்பில்லையென கூறுகிறார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது. அதை நான் பல்கலைகழக பேரவை கூட்டத்தில் வெளிப்படுத்துவேன்.

போராடும் மாணவர்களின் உணர்வு எனக்கும் உள்ளது. இந்த தூபியை இடித்தது எனக்கும் கவலைதான். அதை மீள அமைக்க- உரிய வழிமுறைகளில்- நான் தயாராக இருக்கிறேன். இது பற்றி மாணவர்களுடன் பேசவுள்ளென்.

நாம் மீண்டும் தூபியை அமைப்பதற்கு உரிய அனுமதி பெறுவது உள்ளிட்ட விடயங்களில் தமிழ் அரசியல்வாதிகள் துணையாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்“ என தெரிவித்தார்.

https://fb.watch/2Wy2Dgt3yA/

யாழ்.பல்கலைக் கழக முன்றலில், தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு.. (வீடியோ & படங்கள்)

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் ஆள் பிணையில் விடுதலை!! (வீடியோ)

உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.!! (வீடியோ, படங்கள்)

யுத்தத்தில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு பொதுத் தூபி அமைக்கப்பட வேண்டும் !!

நினைவுத்தூபி அகற்றப்பட்டமை தொடர்பில் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் விளக்கம் !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × five =

*