இளப்பமா நினைச்சீங்களா… 3வது போட்டியில் அதிரடி காட்டிய ஸ்மித்.. சதம்… அரைசதம்! (படங்கள்)
இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் 3வது டெஸ்ட் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 4வது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை துவங்கியுள்ள இந்திய அணி ஆட்ட முடிவில் 98 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்துள்ளது.
இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சதத்தை பூர்த்தி செய்த ஸ்டீவ் ஸ்மித் இரண்டாவது இன்னிங்சில் 81 ரன்களை அடித்துள்ளார்.
2வது இன்னிங்சில்
இந்தியா இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடிலெய்ட் மற்றும் மெல்போர்னில் நடந்து முடிந்துள்ள நிலையில் தற்போது சிட்னியில் 3வது போட்டி நடைபெற்று வருகிறது. இதில் தற்போது இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சை ஆடி வருகிறது.
மீண்டு வந்த ஸ்மித்
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் 10 ரன்களை மட்டுமே அடித்து அந்த அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் அதிர்ச்சி அளித்தார். 3வது போட்டியில் அவரது ஆட்டம் கேள்விக்குறியாக இருந்த நிலையில், அந்த கேள்விகளுக்கு விடையளிக்கும் விதத்தில் அவரது ஆட்டம் இரண்டு இன்னிங்சிலும் அதிரடியாக இருந்தது.
ஸ்மித் அபாரம்
இரண்டாவது போட்டியில் இந்தியாவிடம் மோசமான தோல்வியை அடைந்த ஆஸ்திரேலிய அணி, தற்போது ஆடிவரும் 3வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் போட்டியை எதிர்கொண்டது. இந்நிலையில் இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் தனது முத்திரையை ஸ்மித் பதித்துள்ளார்.
சராசரியை நிலைநாட்டிய ஸ்மித்
முதல் இன்னிங்சில் 131 ரன்களை குவித்த அவர், இரண்டாவது போட்டியில் 81 ரன்களை அடித்து அஸ்வின் பௌலிங்கில் ஆட்டமிழந்தார். இந்த தொடரில் அஸ்வின் ஸ்மித்திற்கு மிகப்பெரிய டஃப்பை அளித்துள்ளார். ஆயினும் தனது அடுத்தடுத்த மிகப்பெரிய ஸ்கோர் மூலம் தனது சராசரியை மீண்டும் நிலைநாட்டியுள்ளார் ஸ்மித். அவரது டெஸ்ட் போட்டிகளின் சராசரி 60க்கும் மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.