;
Athirady Tamil News

வின்னர் மற்றும் ரன்னர் அப் இவங்கதான்.. கடைசியா சேஃப் கேமை புரிந்துக் கொண்ட பாலா.. தெறி புரமோ! (வீடியோ, படங்கள்)

0

இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோவில், ஒரு வழியாக பாலாவுக்கு ஞானோதயம் பிறந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே பாலாவை அன்பு கேங் வில்லனாக மாற்றியது. பின்னர், ஆரியையும் ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ஒதுக்கி வைத்தனர்.

இந்நிலையில், டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கின் இறுதிச்சுற்றுக்கள் போராக இருந்தாலும், பாலாவுக்கு ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களின் சேஃப் கேமை புரியவைத்துள்ளது. இதுக்குத்தான்பா பிக் பாஸ் டீம் பாடுபட்டு இருக்காங்க!

குரூபிசம் சர்ச்சை

பாலிவுட்டில் இந்த ஆண்டு பெரிதாக வெடித்த நெப்போடிசம் பிரச்சனையை, தமிழ் பிக் பாஸுக்கு குரூபிசம் பிரச்சனையாக கொண்டு வந்து நிகழ்ச்சியை அதன் போக்கில் வடிவமைத்தனர். அர்ச்சனா, ரியோ செய்வது பக்கா குரூப்பிசம் என ஆரம்பத்தில் இருந்தே அடித்து சொன்ன பாலாவை அப்படியே வில்லனாக மாற்றிவிட்டனர்.

ஒதுக்கி விடப்பட்ட ஆரி

அர்ச்சனா கேங்குக்கு ஆப்பு வைக்க குட்டி குரூப்பை உருவாக்கி பாலா, தன்னை நாமினேஷனில் இருந்து காப்பாற்றிக் கொள்ள பாடுபட்டார். பிக் பாஸ் வீட்டில் இரு குட்டி குரூப்கள் உருவாகின. சனம் ஷெட்டி, அனிதா சம்பத், ஆரி மற்றும் ரம்யா சோலோ பிளேயர்களாக தெரிந்தனர்.

மக்கள் மனதில் இடம்

ஆனால், தொடர்ந்து ஆரியை போரிங் போட்டியாளர் என கட்டம் கட்டி அவரை ஒட்டுமொத்த ஹவுஸ்மேட்களும் ஒதுக்கினர். இதன் காரணமாகத்தான் மக்கள் மத்தியில் ஆரி அர்ஜுனனுக்கு ஒரு பெரிய இடம் இந்த சீசனில் யாருமே எதிர்பார்க்காத நிலையில், கிடைத்தது. அது கடைசி வரை தொடர்கிறது.

அன்பு கேங்கின் பிள்ளைகள்

ரியோ ராஜ், சோமசேகர் மற்றும் கேபி அன்பு கேங்கின் பிள்ளைகளாக ஃபைனல் வரைக்கும் காப்பாற்றப்பட்டு வந்தனர். தற்போது, திடீரென ரியோவும் சோமும் தான் கப் ஜெயிக்க போகிறார்கள் என்கிற தொனியில் ஆட்டம் சென்று கொண்டு இருக்கிறது. பாலாவையும், ஆரியையும் வில்லன்களாக மாற்றிவிட்டனர்.

டிக்கெட் டு ஃபினாலே யாருக்கு

இதுவரை அதிக புள்ளிகளை சோமசேகர் தான் கொண்டு இருக்கிறார். இந்த வாசகம் டாஸ்க்கிலும் சோமுக்கு மட்டுமே நல்லவன் டேக் ஒட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், டிக்கெட் டு ஃபினாலே சோமுக்குத்தான் போய் சேரும். இந்த வாரம் குறைவான ஓட்டுக்களை பெற்றுள்ள சோம், டிக்கெட் டு ஃபினாலேவை தூக்கிக் கொண்டு ஃபைனல்ஸுக்கு சென்று விடுவார், அவருக்கு அடுத்த இடத்தில் குறைவான ஓட்டுக்களுடன் இருக்கும் ரம்யா வெளியேற்றப்படுவார் என்று தெரிகிறது. பார்க்கலாம்.

பாலாவுக்கு ஞானோதயம்

இந்த கேமை சேஃப் கேமா பயன்படுத்தி சிலர் தப்பா விளையாடி ஜெயித்துக் கொண்டிருக்கின்றனர் என்பதை நெத்தியில் அடித்தது போல சொன்னதால், தான் ஆரி கெட்டவனாக்கப்பட்டார். தொடர்ந்து அவருடன் பாலா சண்டையிட்டு வருவதால், ஆரியையும் பாலாவையும் அழகாக வெளியே அனுப்ப ரம்யா, ரியோ, சோம், கேபி பக்காவாக வேலை செய்து கொண்டு இருக்கின்றனர். அதை இன்றைய எபிசோடில் தான் பாலா புரிந்து கொண்டார் என்று தெரிகிறது.

யாருக்கு சவுக்கடி

பாலாஜி முருகதாஸ், பேசும் போது நானோ, ஆரியோ சேஃப் கேம் விளையாடல, ஆனால், அதை சில பேர் விளையாடிக் கொண்டு நல்லவர்களாகவே கடைசி வரை வந்து விட்டனர். இத்தனை வாரம் டி.ஆர்.பி ஏற்றிக் கொடுத்த நாங்க கெட்டவங்க, வேர்க்கடலை சாப்பிட்டுக்கிட்டு, குரூப்பிசம் செய்து விளையாடி கப் வாங்கப் போற நீங்க நல்லவங்களா என திருப்பி கேட்டு ரம்யா, ரியோ மற்றும் சோமுக்கு சரியான சவுக்கடி கொடுத்துள்ளார் என்று தெரிகிறது. நிகழ்ச்சியை பார்ப்போம்!

வின்னர், ரன்னர்

பாலா கடைசியாக இதுவரை தான் அவருக்கு சொல்ல வந்ததை புரிந்து கொண்டார் என ராயல் சல்யூட் வைத்தார். இந்த சீசனை போராக கொண்டு செல்லாமல், பரபரப்புக்கு பஞ்சமின்றி கொண்டு சென்று, இறங்கி விளையாடிய பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆரிக்குத் தான் வின்னர் மற்றும் ரன்னர் அப் டைட்டிலை கொடுக்கணும் என பிக் பாஸ் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். விஜய் டிவியின் பிளான் என்னவோ?
“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.