;
Athirady Tamil News

“போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்”!! (வீடியோ)

0

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த உணவு தவிர்ப்பு போராட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர் இ.அனுசன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு “போராட்டத்தின் வடிவங்கள் மாறலாம் போராட்டங்கள் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருக்கும்” எனவும் இ.அனுசன் மேலும் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இ.அனுசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்….

யாழ்.பல்கலைக்கழகத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டமையை தொடர்ந்து எமது மாணவர்கள் 6 பேர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்கள்.

தொடர்ந்து இன்று காலை துணைவேந்தர் தலைமையில் தூபிக்கான அடிக்கல் நாட்டப்பட்தை அடுத்து மாணவர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதனால் நாங்கள் அனைவரும் வடக்கு கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாளுக்கு அழைப்பு விட்டிருந்தோம்.

அதற்கு அமைவாக இன்றைய நாள் முழுவதும் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பது மாணவர் ஒன்றியத்தின் கோரிக்கை.

ஏனெனில் இது சிங்கள அரசாங்கத்தால் இராணுவ, மற்றும் பொலீஸ் கெடுபாடிகள் என்பன பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ளே இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது.

அந்த வகையில் நாங்கள் அரசுக்கு எதிராக அரசை எதிர்த்து இன்று நாங்கள், படையினர் மற்றும் பொலிஸார் உடன் வெளியேற வேண்டும் என்பதே எமது கோரிக்கை. இதனால் அடக்கு முறைகளுக்கு எதிரான வெளிப்பாடாகவே ஹர்தாளை இன்று முன்னெடுத்துள்ளோம்.

எமது போராட்டத்திற்கு பல பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள், கிழக்கு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஊடகவியலாளர்கள், முகப்புத்தக போராளிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.

அத்தோடு எமது பல்கலைக்கழக மாணவர்கள் முன்னாள் மாணவர் ஒன்றியத்தினர், ஆசிரியர்கள் மற்றும் இறுதியாக இந்த போராட்டத்தை நிறைவு செய்து வைத்த துணைவேந்தருக்கும் மாணவர் ஒன்றியம் சார்பாகவும் மாணவர்கள் சார்பாகவும் நன்றியினை தெரிவித்து கொள்ளுகின்றோம் என தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”



யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குனராஜா மாணவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.!!(வீடியோ, படங்கள்)

யாழ்.பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குனராஜா மாணவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.!!(வீடியோ, படங்கள்)

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் துணைவேந்தரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.!! (வீடியோ, படங்கள்)

யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஊடக அறிக்கை!! (வீடியோ)

“இறந்தோர் நினைவுச் சின்னம்” இடித்தகற்றப்பட்டமை அதிர்ச்சி தரும் விடயமாகும் – பல்கலைக்கழக ஊழியர் சங்கம்!!

மாணவர்களிற்கு இருக்கும் உணர்வு எனக்குமுண்டு; தூபியை மீள அமைக்க தயார்: “புளொட்” தலைவரிடம் தெரிவித்த துணை வேந்தர் (வீடியோ & படங்கள்)

யாழ்.பல்கலைக் கழக முன்றலில், தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்பு.. (வீடியோ & படங்கள்)

உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.!! (வீடியோ, படங்கள்)

திங்கட்கிழமை பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு : த.தே.ம.முன்னணியின் அமைப்பாளர் மயூரசர்மா!!

யாழ். பல்கலைக்கழக பிரதான வாயில் உணவு தவிர்ப்புப் போராட்டம்!! (வீடியோ)

போராட்டம் இடம்பெற்ற இடத்தில் இருந்து செல்லாத நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை!! (வீடியோ)

அரசின் நடவடிக்கைகள் இன ஐக்கியத்தை ஏற்படுத்தாது- புளொட் தலைவர் கண்டனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக நிர்வாகத்தினரின் இழிசெயலால் தன் மீது கழுவ முடியாத கரியைப் பூசிக் கொண்டுள்ளது -பொ. ஐங்கரநேசன் கண்டனம்!!

யாழ்.பல்கலை நினைவுத்தூபி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது; அழுத்தங்களாலேயே உடைத்தோம்: துணைவேந்தர் சிறிசற்குணராஜா!!

முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு தமிழ்நாட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்டனம்.!! (படங்கள்)

யாழ்.பல்கலைக்கழகம் முன்பாக இடைவிடாது போராட்டம் தொடர்கின்றது!! (வீடியோ, படங்கள்)

இனத்தின் அடையாளத்தை அழிப்பவர்களை!! மானத்தமிழர்கள் முறியடிப்பர்!! மயூரன்!!

யாழ். பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அகற்றப்படுகிறது!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nine − 7 =

*