;
Athirady Tamil News

வவுனியா நகர கொரோனா கொத்தணியால் பாதித்தோர் எண்ணிக்கை 103ஆக உயர்வு!!

0

வவுனியா நகர கொரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 24 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் இன்று மட்டும் வவுனியா நகர கொத்தணியுடன் தொடர்புடைய 49 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

இதன்மூலம் வவுனியா நகர கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 103ஆக உயர்வடைந்துள்ளது.

வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி மற்றும் மில் வீதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிபவர்களுள் 54 பேருக்கு கடந்த 8ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அந்த தொற்றாளர்களுடன் தொடர்புடையோரின் மாதிரிகள் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன.

இன்றைய பரிசோதனையில் 24 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

வவுனியாவில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி!!

வவுனியாவில் பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு!! (படங்கள்)

வவுனியா வடக்கில் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!!

You might also like

Leave A Reply

Your email address will not be published.

one × 4 =

*