;
Athirady Tamil News

அடங்காத ஷீபா.. செருப்படி.. பொண்டாட்டியா இது… 22 பக்கத்துக்கு லெட்டர் எழுதிவிட்டு புருஷன் ஓட்டம்!! (படங்கள்)

0

புருஷனை செருப்பாலேயே அடித்துள்ளார் ஷீபா.. இத்தனைக்கும் இந்த கணவன் ஒரு போலீஸ்காரர்.. அளவுக்கு அதிகமான அதிர்ச்சியும், அவமானமும் அடைந்த போலீஸ்காரர், ஷீபா தொல்லை தாங்காமல் வீட்டை விட்டே மாயமான சம்பவம் குமரியில் பரபரப்பை தந்து வருகிறது.. அத்துடன் இந்த போலீஸ்காரர் உருக்கமான ஒரு வேண்டுகோளையும் முன்வைத்து 22 பக்கத்துக்கு லெட்டர் எழுதி உள்ளது, மேலும் கலங்கடித்து வருகிறது.

அருமனை வெள்ளாங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பர்ணபாஸ்… இவரது மகன் ஜினிகுமார்.. 36 வயதாகிறது.. இவரது மனைவி ஜாக்குலின் ஷீபா… இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கிறார்கள். ஜினிகுமார் சென்னை பூக்கடை போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். ஷீபா தன்னுடைய குழந்தைகளுடன் அருமனை பகுதியில் வசித்து வந்தார்… கணவன்- மனைவிக்கு இடையே ஏதோ சண்டை வந்துபோகுமாம். இந்நிலையில், லீவு எடுத்து கொண்டு ஜினிகுமார் 6ம் தேதி குழந்தைகளை பார்க்க ஊருக்கு வந்திருக்கிறார்.. ஆனால், வீட்டில் இருந்த ஜினிகுமார் திடீரென மாயமாகி விட்டார்.. அவர் எங்கே போனார் என்றே தெரியவில்லை..

விசாரணை

ஜினிகுமார் மாயமானது குறித்து, அவரது தந்தை பர்ணபாஸ் அருமனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போதுதான் மொத்த விவகாரமும் வெளியே வந்தது. குழந்தைகளை பார்க்க கடந்த 6-ம்தேதி நட்டாலம் சென்றபோது, ஷீபாவும், ஷீபாவின் அம்மா லதா, மச்சினன் ஆகியோர் ஜினிகுமாரின் சொத்துக்களை எழுதிதர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

செருப்படி

எல்லா சொத்தையும் ஷீபா பெயருக்கு எழுதி வைக்க வேண்டும் என்று கேட்டார்களாம்.. இதற்கு ஜினிகுமார் மறுக்கவும், அவரை அங்கேயே எல்லாரும் சேர்ந்து தாக்கி உள்ளனர்.. அதுமட்டுமல்ல, செருப்பை எடுத்து ஜினிகுமாரை அடித்துள்ளனர்.. இதனால் அதிர்ச்சி அடைந்த ஜினிகுமார், மனவேதனையுடன் அவரது அப்பா வீட்டுக்கு சென்றிருக்கிறார்.. அங்கு போனதில் இருந்து யாருடனும் பேசாமலேயே இருந்திருக்கிறார்.. இதற்கு பிறகுதான் அவர் காணாமல் போய் உள்ளார்.

22 பக்க லெட்டர்

பிறகு அந்த வீட்டை சோதனை செய்ததில் ஒரு லெட்டர் கிடைத்தது… 22 பக்கத்துக்கு லெட்டரை எழுதி வைத்து விட்டு போயுள்ளார் ஜினிகுமார். அந்த கடிதத்தை படித்து பார்த்துவிட்டு போலீசாரே கலங்கி போய்விட்டனர்.. தன்னை தன்னுடைய வீட்டில் வறுமையிலும் எப்படி படிக்க வைத்தார்கள் என்பதை விவரித்து ஜினிகுமார் எழுதியிருந்தார்.. கைக்குழந்தை முதல் அப்பா, அம்மா தன்னை காலேஜ் வரை படிக்க வைக்க எடுத்து கொண்ட முயற்சி வரை அனைத்தையும் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்திருந்தார்.

அப்பாவின் தியாகம்

தன்னுடைய 2 சகோதரிகளையும் கஷ்டப்பட்டு கல்யாணம் செய்து தந்தது முதல், தனக்கு பிடித்தமான இந்த போலீஸ் வேலை கிடைக்க அப்பாவின் தியாகம் முதல் ஒவ்வொன்றாக உருக்கத்துடன் பதிவு செய்தார். மேலும் அந்த கடிதத்தில், தன்னுடைய அம்மா புற்றுநோயால் அவதிப்பட்டபோது, மருமகள் என்ற முறையில் தன்னுடைய மனைவி ஷீபா, சிகிச்சைக்கு பணம் தரக்கூடாது என்று தடுத்தாராம்.. அதுமட்டுமில்லை, பேரப்பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால்கூட, தன் பெற்றோரிடம் குழந்தைகளை கொண்டு போய் காட்ட ஷீபா விரும்பவில்லையாம்.

பராமரிப்பு

இவ்வளவையும் சொன்ன ஜினிகுமார், இறுதியில் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளார்.. மனைவியை பராமரிக்கும் பொறுப்பு கணவனுக்கு இருப்பதுபோல, தந்தையை பராமரிக்கும் பொறுப்பும் மகனுக்கு இருக்க வேண்டும்..எனக்கு சொந்தமான இந்த நிலம் என்னடைய அப்பாவுக்கு போய் சேர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.. செருப்பால் அடிக்கலாமா? தன்னை செருப்பால் அடித்து அவமானப்படுத்தியதால்தான் வாழ்க்கையை முடித்து கொள்ள துணிந்துவிட்டேன் என்று ஜினிகுமார் அந்த லெட்டரில் தெரிவித்துள்ளார்.

மாயம்

இந்த கடிதம் பெரும் பரபரப்பை குமரியில் ஏற்படுத்தி உள்ளது.. அருமணை போலீஸில், ஜினிகுமார் அளித்த புகாரின்பேரிலும், இந்த கடிதத்தின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.. ஆனால், இப்போது ஜினிகுமார் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை.. அவரது செல்போனுக்கு தொடர்பு கொண்டால் ஸ்விட்ச் ஆப் என்று வருகிறதாம்.. அதனால் மாயமான அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 3 =

*