;
Athirady Tamil News

இப்படியெல்லாம் எப்படிய்யா யோசிக்கிறீங்க.. பிக்பாஸ் டாஸ்க்கை பார்த்து காண்டான ஃபேன்ஸ்! (வீடியோ, படங்கள்)

0

பிக்பாஸ் ஹவுஸ்மேட்டுகளுக்கு கொடுத்த மாவு டாஸ்க்கை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஃபினாலே வாரத்தை முன்னிட்டு ஏற்கனவே எவிக்ட்டான போட்டியாளர்களை அழைத்து வந்துள்ளார் பிக்பாஸ்.

அவர்களையெல்லாம் வைத்து என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போயுள்ள பிக்பாஸ், வித்தியாசமாய் யோசித்து மாவு டாஸ்க் ஒன்றை கொடுத்தார்.

ஃபன் டாஸ்க்

எந்த மதிப்பெண்களும் இல்லாமல் ஃபன் டாஸ்க்காக இந்த டாஸ்க் கொடுக்கப்பட்டது. இதில் கார்டன் ஏரியாவில் ஒரு டேபிளில் மாவும் அதற்கு எதிரே சற்று தொலைவில் ஒரு டேபிளில் காலி பவுலும் வைக்கப்பட்டிருந்தது.

வாயில் கார்டு மூலம்

ஒரு டேபிளில் உள்ள மாவை, கையை பயன்படுத்தாமல் வாயில் கார்ட்ஸை வைத்து அள்ளி செயின் போல் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு மாற்றி காலி பவுலை நிரப்ப வேண்டும்.

சிரித்தே பறக்கவிட்டனர்

இதில் ஆண்கள் ஒரு அணியாகவும் பெண்கள் ஒரு அணியாகவும் பங்கேற்றனர். பெண்கள் அணியில் இருந்த நிஷா, கேபி, ரேகா, ரம்யா ஆகியோர் மாவை அள்ளும் போதே சிரித்து பறக்கவிட்டனர். நிஷாவின் தலையில் கொட்டி நிஷாவின் தலையில் கொட்டி இந்த போட்டியில் சீரியஸாக விளையாடிய ஆண்கள் அணியே வெற்றி பெற்றது. முகம் முழுக்க மாவுடன் பார்க்கவே காமெடியாக இருந்தனர் ஹவுஸ்மேட்ஸ். இறுதியாக இருந்த மிச்ச மீதி மாவையும் நிஷாவின் தலையில் கொட்டினார் கேபி.

ரொம்ப நல்லா இருக்கீங்க

இதனால் பேய் போன்ற லுக்கில் கொடூரமாக இருந்தார் நிஷா. இதை பார்த்த பிக்பாஸ், நிஷா இப்போதான் நீங்க ரொம்ப நல்லா இருக்கீங்க என்று கூறி கலாய்த்தார். பிக்பாஸ் கொடுத்த இந்த டாஸ்க்கை பார்த்த ரசிகர்கள் எப்படிய்யா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க என்று கேட்டு வருகின்றனர்.










“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − 14 =

*