;
Athirady Tamil News

ஆரி பக்கமே திரும்பல.. ரம்யாவுக்கு திருஷ்டி எடுத்து.. பாலாவை தூண்டிவிட்டு.. வேலையை காட்டிய அர்ச்சனா! (வீடியோ, படங்கள்)

0

பிக்பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வந்துள்ள அர்ச்சனா, ஆரி பக்கமே திரும்பவில்லை, மாறாக மற்றவர்களை தூண்டிவிட்டு தனது சகுனி வேலையை ஆரம்பித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்த வாரத்துடன் நிறைவடைய உள்ளது. பிக்பாஸின் ஃபினாலே வாரத்தில் ஆரி, பாலாஜி, ரியோ, சோம், கேபி, ரம்யா என 6 பேர் உள்ளனர். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஏற்கனவே எவிக்ட்டான போட்டியாளர்களான அர்ச்சனா, ரமேஷ், ரேகா மற்றும் நிஷா ஆகியோர் மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளனர்.

ஸ்டோர் ரூம் வழியாக

அவர்களின் வருகையை முன்னிட்டு ஹவுஸ்மேட்ஸ் அனைவரையும் கார்டன் ஏரியாவில் இருக்குமாறு கூறிய பிக்பாஸ் வீட்டின் கதவை ஸ்க்ரீன் போட்டு மூடினார். பின்னர் ஸ்டோர் ரூம் வழியாக 4 பேரையும் உள்ளே அழைத்து வந்தார்.

கேஷ்வலாக என்ட்ரி

அர்ச்சனா வந்த வேகத்தில் கிட்சனில் வேலையை தொடங்கினார். ரமேஷ் வழக்கம் போல் பெட்ரூமில் போய் படுத்துக்கொண்டார். மற்ற போட்டியாளர்களும் கேஷ்வலாக வீட்டுக்குள் இருந்தனர். ஹவுஸ்மேட்ஸ் ஆரவாரம் ஹவுஸ்மேட்ஸ் ஆரவாரம் நிஷா கிட்சன் கப்போர்டில் ஒளிந்து கொண்டார். இந்நிலையில் வீட்டுக்குள் யாரோ இருப்பதை அறிந்த ரம்யா மற்ற ஹவுஸ்மேட்ஸை அழைத்து காட்டினார். எல்லோரும் கத்தியப்படியே உள்ளே சென்றனர்.

ஆரியே சென்றார்..

அனைவரையும் அழைத்து அழைத்து ஒரு முறைக்கு பலமுறை கட்டியணைத்தார் அர்ச்சனா. இறுக்கிப் பிடித்து முத்தமெல்லாம் கொடுத்தார். ஆனால் ஆரி பக்கம் மட்டும் திரும்பவே இல்லை. ஆரியே தானாக சென்று அவரை அணைத்தார். வாத்தி கம்மிங் பாடலுக்கும் ஆடினார். அப்போதும் ஆரியின் முகத்தை ஏறேடுத்துக் கூட பார்க்கவில்லை.

எதுக்குன்னு கேட்காத

தொடர்ந்து கார்டன் ஏரியாவில் ரம்யாவிடம் பேசிய அர்ச்சனா, அவரின் முகத்தை தடவி திருஷ்டி எடுத்தார். மேலும் ஏன் என்று மட்டும் கேட்காதே என்றும் கூறினார் அர்ச்சனா. ஆனால் அவர் செய்தது, ரம்யா ஆரியை தவறாக காட்ட பேசிய பேச்சுக்கு என்பது ரசிகர்களுக்கு புரிந்தது.

பெருமைபடுகிறேன்

அடுத்து பாலாஜியிடம் சென்ற அர்ச்சனா, உன்னை நினைத்து நான் பெருமை படுகிறேன். 105 நாட்கள் மக்கள் இங்கு இல்லை. நாம்தான் இருந்தோம். அதனால் என்ன நடந்தது என்பது எங்களுக்கு தெரியும் சந்தேகத்தின் பலனை மக்களுக்கு கொடுத்துவிடுவோம் என்றார்.

ஆரியை காலி பண்ண

அர்ச்சனா கொஞ்சமும் மாறாமல் பழைய பழிவாங்கும் குணத்துடனேயே பிக்பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஆரியை காலி பண்ண வேண்டும் என்பதற்காகவே பிக்பாஸ் அர்ச்சனாவை வீட்டுக்குள் கொண்டு வந்துள்ளார் என சாடி வருகின்றனர்.

பிபியை ஏற்றாதீர்கள்

இன்னும் சிலர் கடைசி வாரத்திலாவது மக்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் கொண்டு செல்லுங்கள். திரும்பவும் கேங்காக பிரிந்து ஆரியை டார்கெட் செய்து மக்களின் பிபியை ஏற்றாதீர்கள் என்றும் விளாசி வருகின்றனர். தாங்க முடியல.. மேலும் அர்ச்சனாவின் பிஹேவிங்கை பார்த்த நெட்டிசன்கள் அவரை கன்னாபின்னாவென கழுவி ஊற்றி வருகின்றனர். பிக் பாஸ் வீட்டுக்கு அன்பு கேங்க் என்ட்ரி.. ஸ்ஸ்ஸப்பா தாங்க முடியல. அன்பை அள்ளி அள்ளி கொடுத்தாங்க.

எல்லாரும் எல்லாரையும் பாராட்டினாங்க. ஆனால் அர்ச்சனா முகத்தில் ஆரி மேல் இருந்த கோபம் வேர லெவல். இருக்கட்டும் நம்ம தலைவி சனம் வரட்டும் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

உன் கனவு பலிக்காது அர்ச்சனா நடந்து கொண்ட விதத்தை பார்த்த இந்த நெட்டிசன், நீ இன்னும் 100 நாள் 24 மணி நேரமும் கூட காட்டு!! அர்ச்சனா உன் கனவு பலிக்காது.. ரொம்ப கஷ்ட படாத.. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.. என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.