;
Athirady Tamil News

அம்மா நிச்சயம் பெருமைப்படுவாங்க.. 2 வாரத்துக்கு முன்னாடியே வந்திருந்தா.. ஷிவானியை தேற்றிய கமல்! (வீடியோ, படங்கள்)

0

கயிறு இழுக்கும் டாஸ்க்கில் ஜெயித்ததும் கண்டிப்பா இந்த வாரம் நாம சேவ் ஆகிடுவோம்னு ஷிவானி நினைச்சிருப்பாங்க.. ஆனால், இந்த வாரமே அவரை வெளியேற்றியது ஷிவானியை ரொம்பவே அப்செட் ஆக்கியது.

மற்ற போட்டியாளர்களை போல சந்தோஷமாக சிரித்துக் கொண்டு செல்லாமல் மனதில் கஷ்டத்துடனே விடைபெற்ற அவருக்கு கமல் ஆறுதலான வார்த்தைகளை சொல்லி தேற்றினார்.

அழகு சிலை

இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழகு சிலையாக இருந்தது ஷிவானி மட்டும் தான். தினமும் பாடல் போடும் போது பாலாஜியை எழுப்பி விட்டு, சக போட்டியாளர்களுடன் சேர்ந்து டான்ஸ் ஆடுவதே தனி அழகு. இளம் போட்டியாளரான ஷிவானி 98 நாட்கள் பிக் பாஸ் வீட்டை கவர்ச்சிகரமாக வைக்க உதவினார்.

கண் கலங்கிவிட்டார்

ரம்யா சேவ் என கமல் சொன்னதுமே, ஷிவானியின் கண்கள் கலங்கின. எப்படியோ ஆரியுடன் கடந்த வாரம் ரம்யா போட்ட சண்டைக்கு அவர் தான் வெளியே போவார் என நினைத்திருப்பார். அதே போல ஃபைனல்ஸ்க்கு போகணும்னு ரொம்பவே அவருக்கு ஆசை. கயிறு இழுக்கும் டாஸ்க்கில் கலக்கி சிங்கப்பெண் ஆகியும் எவிக்ட் ஆனது அவருக்கு வருத்தம் தான்.

வெளியே வந்து பார்க்கிறேன்

ஷிவானி எவிக்ட் என சொன்னதும், முதல் ஆளாக ஷிவானியை கட்டித் தழுவி ஆறுதல் சொன்னது பாலாஜி முருகதாஸ் தான். மேலும், ஷிவானியின் காதில் ரகசியமாய், வெளியே வந்து பார்க்கிறேன் என்றார். 4 மணி நேரத்திற்கும் மேலாக அந்த போட்டியில் நின்று அசத்திய ஷிவானி, கீழே விழுந்ததும் பாலா பதறி போய் அவரை மடியில் போட்டதையும், தூக்கிச் சென்றதையும் பல காதல் பாடல்களுடன் போட்டு எடிட் பண்ணி சமூக வலைதளங்களில் கனெக்‌ஷன் கொடுத்து வருகின்றனர்.

அம்மா பெருமைப்படுவாங்க

பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களிடம் விடை பெற்ற ஷிவானி நாராயணன், கமல் சார் முன் வந்து நின்றார். ஷிவானியை பார்த்த கமல், 19 வயசுல உங்களுக்கு இருக்கிற பக்குவம் பலருக்கும் இருக்காது என்று பாராட்டினார். மேலும், கடைசியில உங்க அம்மா உங்களை பார்த்து பெருமைப்படுற மாதிரி செஞ்சிட்டுத் தான் வெளியே போறீங்க, நீங்களும் வெற்றியாளர் தான் என்றார்.

முன்னாடியே வந்திருந்தா

இரண்டு வாரத்துக்கு முன்னாடியே உங்க அம்மா வந்திருந்தா, நீங்க பைனல்ஸ்க்கே போய் டைட்டில் வின் பண்ணாலும் பண்ணியிருப்பீங்க என்றும் கமல் ஷிவானியை நல்லாவே தேற்றினார். வீட்டுக்குப் போனா எப்படிப்பட்ட வரவேற்பு இருக்கப் போகிறதோ என ஷிவானியின் மனதிலும் இருந்த ஒரு வித பதற்றத்தை போக்க உதவினார்.

எல்லாருமே சூப்பர்

பின்னர் அகம் டிவி வழியே அகத்துக்குள் சென்ற ஷிவானியும் கமலும், போட்டியாளர்களை பார்த்து வாழ்த்துக் கூறி விடைபெற்றார். சோமசேகர் ஷிவானியை பார்த்து அனுஷ்கா என்று பாராட்டினார். ஆரி, ஷிவானி 200 சதவீதம் எஃபோர்ட் போட்டு அசத்திட்டாங்க என்றார். பதிலுக்கு பேசிய ஷிவானி, உங்களுக்கு நான் என்ன சொல்றது, எல்லோருமே ஃபைனலிஸ்ட் சூப்பரா விளையாடுறீங்க, அதையே தொடருங்க என சிரித்துக் கொண்டே கூறிவிட்டு விடைப்பெற்றார்.

ஹீரோயின் சான்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ரைசா வில்சன், லாஸ்லியாவுக்கு சினிமாவில் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருவதை போலவே, ஷிவானி நாராயணனுக்கும் ஹீரோயின் சான்ஸ் நிச்சயம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சின்னத்திரை நடிகையாக கலக்கி வந்த அவர், வெள்ளித்திரையிலும் விரைவில் மின்ன வாழ்த்துக்கள்!

“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.