கந்தர்மடம் அரசடி பகுதியில் இருபத்தைந்து குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கப்பட்டது.!! (படங்கள்)
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொழும்பு கிளையின் துணைத்தலைவர் திருமதி .மிதிலா சிறீபத்மநாதன் அவர்களின் நிதியுதவி மூலம் கந்தர்மடம் அரசடி பகுதியில் வசிக்கின்ற வறுமைக்கோட்பாட்டுக்குட்பட்ட இருபத்தைந்து குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள் வழங்கிவைக்கப்பட்டன .
அரசடி பகுதியை சேர்ந்த திரு . கனகன் ஜீவதாஸ் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்செயற்பாடுகளில் முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் , தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களான கருணாகரன் குணாளன் , தரங்கன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர் .