ஹரீன்பெர்ணாண்டே குறித்த ஜனாதிபதியின் கருத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி ஆர்ப்பாட்டம்!!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் ஹரீன் பெர்ணான்டோ குறித்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்று சுதந்திர சதுக்கத்தில் அமைதி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டது.
கருத்துச்சுதந்திரத்தை பாதுகாப்பது என்ற ஆர்ப்பாட்டத்தையே ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்தது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய எதிர்கட்சி தலைவர் சஜித்பிரேமதாச ஹரீன்பெர்ணான்டோவிற்கு பாதுகாப்பு வழங்கப்படுவது குறித்து விசேட கவனம் செலுத்துவேன் என தெரிவித்தார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருக்கு நாடாளுமன்றத்திற்குள்ளேயும் வெளியேயும் கருத்து தெரிவிப்பதற்கான உரிமையுள்ளது என எதிர்கட்சி தலைவர் தெரிவித்தார்.