;
Athirady Tamil News

தாக்கப்பட்ட தவிசாளர் . அம்பாரை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக மாற்றம்.!! (வீடியோ, படங்கள்)

0

பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் மீது நேற்று மாலை வாள் வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
பொத்துவில் ஊறணியில் உள்ள அவரது விடுதியில் மாலை 7 மணியளவில் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த போது பின்னால் வந்தவர்கள் வாள் மற்றும் பொல்லால் தலையில் தாக்கியதில் சத்தமிட்டுள்ளார் விடுதியில் நின்ற அவரின் தந்தை உடனே அவரை வைத்தியசாலைக்கு எடுத்து சென்று. தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மதில் மேலாக ஏறி வந்த ஒரு இனந்தெரியாத குழுவினரே இந்த தாக்குதலை நடத்தி சென்றுள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பொத்துவில் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். தவிசாளர் மாற்றம் ஏற்பட இருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக மட்டக்கிளப்பில் இருந்து “மட்டுநகரான்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten − one =

*