கொரோனாவைரஸ் மருந்துகளைசேமிப்பதற்கான வசதிகள் இரத்தவங்கியிடமுள்ளன-இயக்குநர்!!

இலங்கை பெறவுள்ள கொரோனா வைரஸ் மருந்தினை அவசியமான வெப்பநிலையில் சேமிப்பதற்கான வசதிகள் தன்னிடமுள்ளதாக தேசிய இரத்தவங்கி தெரிவித்துள்ளது.
தேசிய இரத்தவங்கியிடம் அவசியமான வெப்பநிலையில் 500,000 மருந்துகளை சேமிப்பதற்கான வசதியுள்ளது என இரத்தவங்கியின் இயக்குநர் லக்ஸ்மன் எதிரிசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுகாதார அமைச்சு தங்களிடம் கேட்டறிந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
தேசிய நெருக்கடியை கருத்தில் கொண்டு எந்த நேரத்திலும் மருந்தினை சேமிப்பதற்கு தயாரான நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சிற்கு தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எந்த மருந்தினை இலங்கை கொள்வனவு செய்யவுள்ளது எங்கிருந்து கொள்வனவு செய்யவுள்ளது போன்ற விபரங்களை சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.