இலங்கை அணிக்கு தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் இருந்து விலக்களிக்கப்ட்டுள்ளது – ஐக்கியதேசிய கட்சி குற்றச்சாட்டு!!

இங்கிலாந்து அணியின் இலங்கை விஜயம் காரணமாகவே இலங்கையை சேர்ந்தவர்கள் ஜப்பானிற்கு நுழைவதற்கு ஜப்பான் தடை விதித்துள்ளது என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் வெளிப்படை தன்மையின்மையும்; தெளிவான நோக்கமின்மையும் இலங்கையில் புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ் நுழைவதற்கு காரணமாக அமைந்துள்ளது என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
பிரிட்டனில் புதிய வீரியமிக்க கொரோனா வைரஸ் இனம் காணப்பட்டதை தொடர்ந்து பிரான்ஸ் ஜேர்மனி உட்பட 40 நாடுகள் பிரிட்டனை சேர்ந்தவர்கள் தங்கள் நாடுகளில் நுழைவதற்கு தடை விதித்தன என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
எனினும் இலங்கை அரசாங்கம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட இங்கிலாந்து சுற்றுப்பயணத்தை தொடர திட்டமிட்டது என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அணி தனது வீரர் ஒருவர் மூலம் இலங்கை;ககுள் வைரசினை கொண்டுவந்துள்ளது என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இந்த கொரோனா வைரஸ் 70 வீதம் அதிகமான தொற்றும் தன்மையை கொண்டது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர் பிரிட்டனில் 50,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இலங்கையில் புதிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து ஜப்பான் இலங்கையிலிருந்து தனது நாட்டிற்கு வருவதற்கு தடைவிதித்துள்ளது எனவும் ஐக்கியதேசிய கட்சி தெரிவித்துள்ளது.
இது ஜப்பானுடனான இலங்கையின் வர்த்தகத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கட்சி தெரிவித்துள்ளது.
தென்னாபிரிக்காவிலிருந்து நாடு திரும்பிய இலங்கை அணிக்கு தனிமைப்படுத்தல் நடைமுறைகளில் இருந்து விலக்களிக்கப்ட்டுள்ளது என தெரிவித்துள்ள ஐக்கியதேசிய கட்சி இதற்கான அனுமதியை யார் வழங்கியது என விளையாட்டு அமைச்சர் தெளிவுபடுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.