இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு வைத்தியர்களுக்கு கொரோனா!!

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் மேலும் இரண்டு வைத்தியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர் எனவும் மற்றைய வைத்தியர் வைத்தியசாலையின் குழந்தை வார்டில் பணிபுரிந்து வந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த 12 ஆம் திகதி தவலம வாரச் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 23 வரத்தகர்களுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவர்களில் சிலர் கடந்த தினம் தொற்றாளர்களாக இனங்காணப்பட்ட நெலுவ வாரச்சந்தை வர்த்தகர்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அதேபோல், மொனராகலை நகரில் எழுமாற்றாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் 7 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.