;
Athirady Tamil News

பாலா, ரம்யா மற்றும் ரியோவுக்கு என்ன ஆச்சு? மைண்ட் ஃபுல்லா பிக் பாஸ் டைட்டில் தான் ஓடுது போல? (வீடியோ, படங்கள்)

0

இந்த வாரம் முழுக்க பாலா, ரம்யா மற்றும் ரியோவின் முகங்களே சரியாக இல்லையே ஏன்னு சமூக வலைதளங்களில் பிக் பாஸ் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சி நாளையுடன் நிறைவடைகிறது.

இந்த சீசனில் டைட்டில் வின்னர் மகுடம் யாருக்கு கிடைக்கப் போகுதுன்னு பார்க்க ரசிகர்கள் ஆர்வம்.

உற்சாகம் கொடுக்க

இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு இந்த வாரம் போட்டியாளர்களை உற்சாகப்படுத்த விருந்தாளிகளாக வந்தனர். ஆனால், வந்தவர்கள் யாரும் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தியது போலவே தெரியவில்லை. பதிலுக்கு சிலருக்கு அதிக பயத்தையே கொடுத்து சென்றுவிட்டனர்.

பாவ மன்னிப்பு

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி சமூக வலைதளங்களில் மக்கள் ரியாக்‌ஷனையும் நிகழ்ச்சியையும் பார்த்து விட்டு மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த போட்டியாளர்கள் தங்களுக்கான பாவ மன்னிப்பை கேட்கும் வாய்ப்பாகவே இதை பயன்படுத்திக் கொண்டனர். அனிதா சம்பத் கேமரா முன் நின்று அழுது மக்கள் இடத்திலும், மற்ற ஹவுஸ்மேட்கள் மத்தியிலும் மன்னிப்பு கேட்டார்.

ரூல்ஸை மீறி

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரூல்ஸ் மீறுவதும் ஒரு ரூல்ஸாகவே மாறிவிட்டது. வெளியே இருந்து வந்த போட்டியாளர்களில் சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் பாலாவை நல்லாவே பயமுறுத்தி சென்று விட்டனர் என்றே சொல்லலாம். அதன் பிறகு பாலாவின் முகத்தில் இருந்த பழைய சந்தோஷம் டோட்டலாக அவுட். போதா குறைக்கு ஷிவானி கடைசியாக வந்து பாலாவை எதிர்த்து பேசியதும் பாலாவுக்கு நெகட்டிவ் தான்.

எதையோ பறிகொடுத்தது போல

ஆரம்பத்தில் காமெடி பண்ணிக் கொண்டு ரசிகர்களை மகிழ்வித்த நடிகர் ரியோ ராஜ், கிராண்ட் ஃபினாலேவின் கடைசி வாரத்தில் ஏன் இப்படி எதையோ பறிகொடுத்தது போல இருக்கிறார் என்றே ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஹேர் கட், ஷேவ் பண்ணாமல் அவரது முகத்தை முடி மறைத்து இருப்பதை தாண்டியும் அவரது சோகம் வெளியே தெரிகிறது.

மொத்த அன்பு கேங்கும்

இத்தனைக்கும் இந்த வாரம் முழுக்க ஒட்டுமொத்த அன்பு கேங்கும் பிக் பாஸ் வீட்டில் தான் இருந்தார்கள். கடைசியாக 5 லட்சம் பெட்டியை கேபி எடுக்கும் போது, அவரை அந்த கேங்கில் இருந்து யாருமே தடுக்கவில்லை. ரியோ மட்டுமே தடுக்கும் முயற்சியில் தனக்கு அந்த பெட்டி வேண்டும், வெளியே போகணும் என பேசினார். ஆனால், அதுவும் கேமரா கிராபிங்காகத் தான் என்று விமர்சனங்கள் எழுந்தன.

வெளியே சிரித்துக் கொண்டு

பிக் பாஸ் நிகழ்ச்சி முடியப் போகிறது, சீக்கிரம் வீட்டுக்கு போய் உறவுகளோடும், நண்பர்களோடும் இருக்கப் போகிறோம் என நினைத்தாலே சந்தோஷம் தானாக வந்து விடும். ஆனால், வெளியே சிரித்துக் கொண்டு உள்ளே எதையோ சிந்தித்துக் கொண்டே, ரம்யா பாண்டியனும் சோகமயமாகவே காணப்படுகிறார்.

ஆரி ஹேப்பி

உங்க பிரெண்ட்ஸ்லாம் எங்க ஆரி என ரம்யா பாண்டியன் கேட்ட நிலையில், அனிதா சம்பத்தும், சனம் ஷெட்டியும் ஆரிக்கு ஆதரவு கொடுக்கவே மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தது தெளிவாக தெரிந்தது. மேலும், கடைசி வரை ஆரி கூடவே சப்போர்ட்டாக இருந்தனர். கடந்த வாரம் மத்தவங்க கார்னர் பண்றாங்களேன்னு ஃபீல் பண்ண ஆரி, இந்த வாரம் செம ஹேப்பியாகவே இருந்தார்.

சந்தோஷத்தில் சோம்

ஆரியை போலவே சோமசேகரும் சந்தோஷமாகவே இருந்தார். அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் மற்றும் மீண்டும் வீடு முழுவதும் நிறைந்து இருப்பதை பார்த்த சோமசேகர் முகத்தில் கொஞ்சம் கூட டைட்டில் பற்றிய கவலை தாண்டவம் ஆடியது போலவே தெரியவில்லை. கேபி கிளம்பும் போது ஏன் போற இரு என்றார். ரியோ பெட்டியை கேட்டதும் அவரை திட்டி சிறப்பாக விளையாடினார்.

யாருக்கு டைட்டில்

பிக் பாஸ் வீட்டுக்கு வந்த விருந்தாளிகள் அனைவரும் மீண்டும் வெளியேறி விட்டனர். சனிக்கிழமையான இன்று 5 பேரில் மூன்று அல்லது இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்கள் என தெரிகிறது. நாளை டைட்டில் வின்னர் மற்றும் ரன்னர் அப் மகுடங்கள் யாருக்கு கிடைக்கப் போகிறது என்பதை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். மக்களின் ஓட்டுக்கள் அடிப்படையில் டைட்டில் வின்னர் தேர்வு செய்யப்படுவாரா? இல்லை விஜய் டிவியின் விருப்பத்திற்கு டைட்டில் வின்னர் தேர்வு செய்யப்படுவாரா? என்பதும் மில்லியன் டாலர் கேள்வி தான்!


“பிக்பொஸ்” தொடர்பான செய்திகளை முழுமையாகப் பார்வையிட இங்கே அழுத்தவும்…
http://www.athirady.com/tamil-news/category/news/bigboss

You might also like

Leave A Reply

Your email address will not be published.