;
Athirady Tamil News

பெண் ஒருவரின் தகவலுக்கு அமைய கைப்பற்றப்பட்ட ஹெரோயின்!!

0

பொரள்ள, வனாதமுல்ல சிரிசர உயன வீட்டுத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஒரு தொகை ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வீட்டுத் தொகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய வீடொன்று சோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன்போது மூடப்பட்டிருந்த வீடொன்றில் இருந்து 1 கிலோ 6389 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 610,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*