ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் எப்போது கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து வழங்கப்படும்?

அரசாங்கத்தின் கொரோனோ வைரஸ் தடுப்பு மருந்து வழங்கும் நடவடிக்கையின் மூன்றாம் கட்டத்திலேயே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் தடுப்பு மருந்தினை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக மோர்னிங் தெரிவித்துள்ளது.
முன்னிலை சுகாதார பணியாளர்களிற்கு மிகுந்த முன்னுரிமை அளிக்க திட்டமிட்டுள்ள அரசாங்கம் கொரோனா வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பாதுகாப்பு படையினருக்கும் முன்னுரிமை அளிக்கதிட்டமிட்டுள்ளது.
60வயதிற்கு மேற்பட்டவர்களிற்கு மூன்றாம் கட்டத்திலேயே கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை பெறுபவர்களில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் முன்னுரிமை வழங்குவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் லலித்வீரதுங்க உள்ளுர் அரசியல் மற்றும் சமூகலாச்சார காரணிகளை கருத்தில்கொண்டே இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்காக அதன் அரசியல் தலைவர்களிற்கு முதலில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தினை வழங்கினார்கள் என தெரிவித்துள்ள லலித் வீரதுங்க நாங்கள் இங்கே அதனை செய்தால் மக்களிற்கு முன்னுரிமை வழங்காமல் ஆளும்குடும்பத்திற்கு முன்னுரிமை வழங்கப்படுகின்றது என தெரிவிப்பார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை மக்களிற்கு முதலில் கொடுத்தால் மக்களை பரிசோதனை செய்துள்ளனர் என தெரிவிப்பார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்காரணமாக 60வயதிற் மேல்பட்டவர்களிற்கு கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும்போதே ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் வழங்க தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.