;
Athirady Tamil News

இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு!!

0

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 264 ஆக அதிகரித்துள்ளது.

அதன்படி, கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய பெண்ணொருவரும், பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவரும், உடப்புசல்லாவை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஆணொருவரும், கேகாலை பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதுடைய ஆணொருவரும், தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடைய ஆணொருவரும், பொலன்னறுவை பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய ஆணொருவரும், கொழும்பு – 8 பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதுடைய ஆணொருவரும், உடுதும்பறை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயதுடைய ஆணொருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + eight =

*