;
Athirady Tamil News

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உட்பட 10 பேருக்கு பிடியாணை!!

0

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் குலதிஸ்ஸ கீகியனகே உட்பட 10 சந்தேக நபர்கள் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராக சந்தப்பத்தினால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு பிரதான நீதவான் மொஹமட் மிஹார் பிடியாணை பிறப்பித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு பெட்ரோலிய கூட்டுத்தாபன வளாகத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து சட்டவிரோதமாக செயற்பட்டதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (18) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தின் போது சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கை ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − fourteen =

*