;
Athirady Tamil News

வடமாகாண ஆசிரியர்கள் தத்தமது மாவட்டங்களுக்குரிய இடமாற்ற வழங்கக்கோரி கவனயீர்ப்பு போராட்டம்!! (படங்கள்)

0

ஒரு கிழமைக்குள் வடமாகாணத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்குள் கல்வி கற்பித்துவரும் ஆறுவருடங்களுக்கு மேலான ஆசிரியர்களுக்கு உரிய இடமாற்றத் தீர்வினை பெற்றுத்தரப்படும் என வடமாகாண ஆளுநரின் செயலாளர் திருமதி மோகனதாசன் தெரிவித்தாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

குறித்த ஒருக்கிழமைக்குள்ள வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்,மற்றும் வடமாகாண கல்விப்பணிப்பாளர்,வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவர் அடங்கிய குழுவின் ஊடாக இடமாற்றம் செய்ய இருக்கும் ஆசிரியர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கப்பெறும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜெயசிங்க தெரிவித்தார்.

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் ஒழுங்கமைப்பில் வடமாகாணத்தின் ஆசிரியர் சங்கத்தின் எற்பாட்டில் கடந்த ஆறுவருடங்களாக வெளிமாவட்டங்களுக்குள் சென்று கல்வி கற்பித்துவரும் வடமாகாண ஆசிரியர்கள் தத்தமது மாவட்டங்களுக்குரிய இடமாற்ற வழங்கக்கோரி இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது,

பின்னர் அங்கியிருந்து வடமாகாண ஆளுநர் செயலகம் வரை சென்று கவனயீர்ப்பு போராட்டத்தினை சும்மர் ஒன்றை மணித்தியாலயம் வரை கவனயீர்ப்பினை முன்னெடுத்தனர்.

அதனை தொடர்ந்து ஆளுநரினை சந்திப்பிதற்கான அனுமதிக்கிடைக்கபெற்றதை அடுத்து இந்த அறிவித்தலை இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் மகிந்த ஜெயசிங்க சுட்டிக்காட்டினார்.

இவ் இடமாற்றம் வழங்காது பட்சத்தில் அகில இலங்கை அனைத்து ஆசிரியர் சேவை சங்கங்கள் ஊடாக பாரிய ஒரு அளவான ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவித்தார்.

இவ் இடமாற்றத்திற்காக சும்மர் 250 மேற்பட்ட ஆசிரியர்கள் வடமாகாணத்தினை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three + fifteen =

*