;
Athirady Tamil News

வவுனியாவில் அவசர அம்புலன்ஸ் சேவையால் பலனில்லை, பாடசாலை அதிபர் குற்றச்சாட்டு!!

0

வவுனியாவில் மாணவர் ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகவீனம் காரணமாக அவசர நோயாளர் காவு வண்டிக்கு (1990) அழைப்பை ஏற்படுத்திய நிலையில் அரை மணிநேரமாகியும் நோயாளர் காவு வண்டி பாடசாலைக்கு வரவில்லை என பாடசாலைஅதிபர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வவுனியா ஓமந்தை மத்திய கல்லூரியில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு வகுப்பறையில் தலைவலி மற்றும் காய்ச்சல் காணப்பட்டதை தொடர்ந்து அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகல் தெரிவித்து அரை மணி நேரத்திற்கு மேலாகியும் அவசர ஊர்தி வரில்லை என பாடசாலை அதிபர் விசனம் வெளியிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இச் சம்பவம் தொடர்பாக தெரியப்படுத்தியுள்ளதாகவும், கொரோனா வவுனியாவில் அதிகரித்துவரும் நிலையில பாடசாலையில் மாணவர்களின் நலன்களில் சுகாதாரப்பிரிவினர் அக்கறைகாட்ட முன்வரவேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 × one =

*