இராஜாங்க அமைச்சு ஒன்றின் சில ஊழியர்களுக்கு கொரோனா!!

தேசிய பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சில் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தொற்றாளர்கள் மேலதிக சுகாதார நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறித்த அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும் குறித்த அமைச்சு இதுவரையில் மூடப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை இணங்காணும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.