;
Athirady Tamil News

கலவரத்தோடு கலவரமாக… சபாநாயகரின் லாப்டாப்பை ஆட்டையைப் போட்ட பெண்!

0

அமெரிக்க பார்லிமென்ட் கட்டிடத்திற்குள் ஜனவரி 6 நுழைந்த டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்தின் போது சபாநாயகர் நான்சி பெலோசியின் லேப்டாப்பை திருடி சென்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க போலீசார் தெரிவித்துள்ளனர். பென்சைல்வேனியா மாகாணத்தை சேர்ந்த ரிலே ஜூன் வில்லியம்ஸ் என்ற அப்பெண், ஜனவரி 18 அன்று கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து திருடப்பட்ட லாப்டாப் அல்லது ஹார்ட் டிரைவ் ஆகியன கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தப்படுவதாக கூறும் போலீசார், மற்ற தகவல்களை வெளியிட மறுத்துள்ளனர். நான்சியின் அலுவலகத்தில் இருந்து, ரிலே ஜூன் லாப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடும் வீடியோ காட்சிகளை எப்பிஐ வெளியிட்டுள்ளது. திருடிய கம்ப்யூட்டர் டிவைஸ் உள்ளிட்ட பொருட்களை ரஷ்யாவில் உள்ள தனது நண்பரிடம் கொடுத்து ரிலே விற்கச் சொன்னதாகவும், அவற்றை ரஷ்ய உளவு அமைப்பான எஸ்விஆரிடம் ஒப்படைக்க திட்டமிட்டிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

எப்பிஐ வெளியிட்டுள்ள வீடியோவில் பச்சை நிற சட்டை அணிந்த பெண் ஒருவர், கூட்டத்தை முந்திக் கொண்டு நான்சி அலுவலகத்திற்குள் செல்லும் காட்சிகளும், அவரின் சட்டையில் “மேக் அமெரிக்கா கிரேட் அகைன்” (Make America Great Again) என்ற வாசகம் எழுதப்பட்டிருந்த காட்சிகளும் பதிவாகி உள்ளன.

இருப்பினும் இந்த வீடியோ காட்சிகள் அல்லது போட்டோக்கள் ஆதாரமாக இருப்பதாக ரிலேவிற்கு எதிராக போலீசார் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை. கலவரம் நடைபெற்ற போது தனது மகள் சம்பவ இடத்தில் இருந்ததை ரிலேவின் பெற்றோர்களும் உறுதி செய்துள்ளனர்.

அமெரிக்க அதிபரானார் ஜோ பிடன்… 46-வது அதிபராக முறைப்படி பதவியேற்றுக்கொண்டார்..! (வீடியோ, படங்கள்)

வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேறினார் டிரம்ப்… ஜோ பிடன் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளவில்லை..!

போகும் போது சும்மா போகலை.. சரமாரியாக கையெழுத்து போட்ட அதிபர்.. 73 பேரை மன்னித்த டிரம்ப்.. ஷாக்! (படங்கள்)

கலங்க வைத்த கமலா ஹாரிஸ்.. பெற்ற தாய்க்கு முதல் மரியாதை.. வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ! (படங்கள்)

அடங்காத டிரம்ப்.. அதிபருக்கான விமானத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து மனைவியோடு கிளம்பினார்!!

அமெரிக்காவில் வரலாறு படைத்தார் கமலா ஹாரிஸ்… துணை அதிபராக பதவியேற்றார்..! (படங்கள்)

“மாற்றுவோம்.. எல்லாத்தையும் மாற்றுவோம்..” முதல் உரையில் அழுத்தி சொன்ன அமெரிக்க அதிபர் ஜோ பிடன்! (படங்கள்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 − 1 =

*