;
Athirady Tamil News

ராஜஸ்தானில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மரணம்..!

0

ராஜஸ்தானின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் ஒருவர் கஜேந்திர சிங் சக்தாவட். 48 வயதான அவர், கல்லீரல் பாதிக்கப்பட்டு இருந்தார். டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்-மந்திரி உள்பட பல்வேறு அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ராஜஸ்தானில் கடந்த அக்டோபருக்கு பின்பு இதுவரை 4 எம்.எல்.ஏ.க்கள் மரணம் அடைந்துள்ளனர். இவர்களில் கஜேந்திரசிங் தவிர மற்ற 3 பேரும் கொரோனாவால் பலியானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அங்கு 4 தொகுதிகள் காலியாக உள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

4 × five =

*