;
Athirady Tamil News

’அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள்’ – ஜோ பைடன் டுவீட்..!

0

அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர்.

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் இன்று பதவியேற்க உள்ளனர். அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய நேரப்படி இரவு 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வாகியுள்ள ஜோ பைடன் தற்போது பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக பாராளுமன்றத்திற்கு வந்துள்ளார்.

இந்நிலையில், ஜோ பைடன் தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது வெளியிட்டுள்ள பதிவில், ‘அமெரிக்காவில் இது ஒரு புதிய நாள்’ என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × 3 =

*