வண்டியும் தொந்தியும் எனும் நாடகம்!! (படங்கள்)
செயல் திறன் அரங்க இயக்கம் வழங்கிய வண்டியும் தொந்தியும் எனும் நாடகம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 7.30 மணியளவில் சூம் செயலி ஊடாக காட்சி படுத்தப்பட்டது.
செயல்திறன் அரங்க இயக்குனர் தே.தேவானந்தின் இயக்கத்தில் , ரி. றொபேர்ட்டின் இசையில், த. பிரதீபன் மற்றும் இ.சாய்ராம் நடித்திருந்தனர்.
தற்போதைய கொரோனா நோய் தொற்று கால கட்டத்தில் பார்வையாளர்களை ஓர் இடத்தில் கூட்டி நாடகங்களை மேடையேற்றுவதில் பெரும் சிக்கல்கள் நிலவுவதனால் , செயற்திறன் அரங்கம் புது முயற்சியாக சூம் செயலி ஊடாக நாடகங்களை காட்சி படுத்துகின்றனர்.
கடந்த 12ஆம் திகதி முதல் முதலாக சூம் செயலி ஊடாக நாடகத்தினை காட்சிப்படுத்திய வேளை வரவேற்பு கிடைக்க பெற்றன. அதனால் இரண்டாம் தடவையாக நேற்றைய தினம் வியாழக்கிழமை மீள நாடகத்தினை காட்சிப்படுத்தினர். அதன் போதும் பெருமளவானவர்கள் நாடகத்தினை சூம் செயலி ஊடாக கண்டு களித்தனர்.’
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”