அமரர் உயர்திரு நா. பாக்கியநாதன் அவர்களின் நினைவாக வாழ்வாதார உதவி..!! (படங்கள்)
புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தினை சேர்ந்தவரும், முல்லைத்தீவு பனங்காமம்பற்று பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும், பாண்டியன்குளம் பிரதேச கிராமசேவகருமான அமரர் உயர்திரு நா. பாக்கியநாதன் அவர்களின் நினைவாக அவரது புதல்வியார் குகதர்சினி (கனடா) அவர்களின் நிதியுதவி (ரூபாய் 40000) ஊடாக வேலணை பிரதேசசபை உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறை தொகுதி செயலாளருமாகிய கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில், புங்குடுதீவு முதலாம், இரண்டாம், ஐந்தாம் வட்டார பகுதிகளில் வாழ்ந்து வருகின்ற வறுமைக்கோட்பாட்டுக் குட்பட்ட குடும்பங்களுக்கு நுளம்பு வலைகள், கிருமி நாசினி பொருட்கள் மற்றும் உலருணவுப்பொருட்கள் என்பன பகிர்ந்தளிக்கப்பட்டன .
இந்நிகழ்வில் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர்களான கருணாகரன் குணாளன், அமிர்தபாலன் (சந்திரன்), புவனேந்திரன் தர்சிகன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.