வவுனியா பட்டானிச்சூர் கிராமத்தின் எந்தவொரு பகுதியும் முடக்கத்தில் இல்லை : சுகாதார பிரிவினர்!! (படங்கள்)
வவுனியா நகரில் சில இடங்கள் முடக்கத்தில் உள்ள போதிலும் பட்டானிச்சூர் கிராமத்தின் எந்தவொரு பகுதியும் முடக்கத்தில் இல்லை என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
பட்டானிச்சூர் முதலாம் , இரண்டாம் , மூன்றாம் ஆகிய ஒழுங்கைகள் முடக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு நேற்று (21.01) மாலை 6.00 மணி தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகிய நிலையில் இச் செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை என்பதுடன் அப்பகுதியில் சில வீடுகள் மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்..
பட்டானிச்சூர் கிராமத்தின் சில பகுதிகளை தனிமைப்படுத்துவதற்கு உயர் அதிகாரிகளின் அனுமதிக்காக காத்திருப்பில் உள்ள போதிலும் இன்று (22.01) காலை 8.00 மணி நிலவரப்படி குறித்த கிராமத்தில் எந்தவொரு பகுதியிலும் தனிமைப்படுத்தல் சட்டம் அமுல்ப்படுத்தப்படவில்லை.
அத்துடன் வவுனியா மாவட்டத்தில் பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, கந்தசுவாமி வீதி, ஹொரொவப்பொத்தானை வீதியின் ஒரு பகுதி ஆகியன மாத்திரமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்தனர்.
பட்டானிச்சூர் முதலாம் , இரண்டாம் , மூன்றாம் ஆகிய ஒழுங்கைகளின் செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “கோபி”